• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் – நாள் ஒன்றுக்கு 24 மணி நேரத்தில் சுமார் 20 மணி நேரம் மக்களுக்காகவே ஓடி ஓடி உழைக்கிறார்,  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு!!

policeseithitv by policeseithitv
April 25, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழக முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் –  நாள் ஒன்றுக்கு 24 மணி நேரத்தில் சுமார் 20 மணி நேரம் மக்களுக்காகவே ஓடி ஓடி உழைக்கிறார்,   அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக முதல்-அமைச்சர்

மு.க.ஸ்டாலின் –

நாள் ஒன்றுக்கு 24 மணி நேரத்தில் சுமார் 20 மணி நேரம் மக்களுக்காகவே ஓடி ஓடி உழைக்கிறார்,

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு!!

 

உடன்குடி, ஏப்ரல், 25

 

உடன்குடி அருகே உள்ள தண்டுபத்து அமைச்சர் தோட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி,மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

 

இக்கூட்டத்திற்கு தமிழக மீன் வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசியதாவது.

 

 

தமிழக முதல்-அமைச்சர் மக்களுக்காக உழைக்கின்ற முழு நேர முதல்வராக செயல்பட்டு வருகிறார். நாள் ஒன்றுக்கு24 மணி நேரத்தில் சுமார் 20 மணி நேரம் மக்களுக்காகவே ஓடி ஓடி உழைக்கிறார், அதனால்தான் தமிழகம் இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாகவும், முன்னோடி மாநிலமாக இருக்கிறது. இதைப் போல நமது தொகுதி எம்.பி.கனிமொழி மக்களோடு மக்களாய் இருந்து மக்கள்பணி செய்து வருகிறார். எந்த நேரத்திலும் தொகுதி மக்கள் அவரைச் சந்திக்கலாம். அவரிடம் தொகுதி தேவைகள் பற்றிப் பேசலாம். இப்படி பழகுவதற்கு எளிமையான எம்.பி.யை நாம் இதுவரை பார்திருக்கவே முடியாது. இப்படிப்பட்டவர்களுக்கு நாம் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் பேசினார்.

 

இதில் சிறப்பு விருந்தினராக கனிமொழி எம்.பி கலந்து கொண்டு 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றிக்காக உழைத்த 100 தி.மு.க.வினருக்கு தலா ஒரு பவுன் தங்க மோதிரம் வழங்கினார். திமுக மாநில நிர்வாகி உமரி சங்கர் மற்றும்

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணன்

உள்ளிட்ட 100 நிர்வாகிகள் ஒரு பவுன் தங்க மோதிரம் பெற்றுக்கொண்டனர்.

மிகப் பிரம்மாண்டமான இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி அனுராதா ஸ்ரீராம் உள்ளிட்ட பாடகர்கள் பங்கேற்ற இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

இந்த கச்சேரியில் எம்ஜிஆர் நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்ற “உன்னை அறிந்தால்” என்ற பாடலை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பாடினார். அவ்வப்போது திமுக நிர்வாகிகள் மலர் தூவியப்படி இருந்தனர். அமைச்சர் பாடலைப் பாடி முடித்ததும் மேடையிலிருந்த திமுக நிர்வாகி ஒருவர் 500 ரூபாய் நோட்டுக்களை மலர் போல் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது தூவி உற்சாகத்தை வெளிப்படுத்தினார்இது அங்கிருந்தவர்களை வியப்படைய செய்தது. பறந்து கீழே விழுந்த 500 ரூபாய் நோட்டுகளை மேடையிலிருந்த இசைக்கலைஞர்கள் எடுத்துக்கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள் அனைவருக்கும் மட்டன் பிரியாணி, சிக்கன் 65 உடன் பிரம்மாண்ட விருந்து நடைபெற்றது.

Previous Post

உலக புத்தக தினத்தில் அரசு பள்ளி மாணவர்களின் அறிவுத் தேடலுக்கு அடித்தளமிடும் இல்லம் தேடிக் கல்வி மையங்கள்

Next Post

வேதாரண்யத்தில் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி – எஸ்.எஸ்.அறக்கட்டளை சிறப்பு ஏற்பாடு

Next Post
வேதாரண்யத்தில் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி – எஸ்.எஸ்.அறக்கட்டளை சிறப்பு ஏற்பாடு

வேதாரண்யத்தில் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி - எஸ்.எஸ்.அறக்கட்டளை சிறப்பு ஏற்பாடு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In