ஊக்க ஊதிய உயர்வு கோரி ஆசிரியர்கள் நாகை தொகுதி எம்.எல்.ஏவிடம் மனு
நாகப்பட்டினம் ஏப்ரல் 24
தற்போது வெளியிடப்பட்டிருக்கும் அரசாணையின்படி உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களுக்கு ரொக்கத் தொகை பரிசாக அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1969ம் ஆண்டு முதல ஊக்க ஊதிய உயர்வு மாத ஊதியத்தில் 6 சதவீத உயர்வாக அளிக்கப்பட்டு வந்தது. இது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாகை சட்டமன்ற தொகுதியில் மட்டும் சுமார் 200 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மீண்டும் பழைய முறைப்படி ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட கோரி மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சரிடம் வலியுறுத்திட நாகை சட்டப்பேரவை உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸிடம் கி.பாலசண்முகம் தலைமையிலான பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் கல்வி அமைச்சரிடம் கொடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள உறுதியளித்தார்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய்
மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

