தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தனர்
ஏரல் தாலுகா சாயர்புரம் பேரூராட்சிக்குட்பட்ட சிவத்தையாபுரம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் வீடுகள் உள்ளன வீடுகளில் உள்ள கழிவு தண்ணீர் கான் மூலம் அருகிலுள்ள குளங்களில் சென்று கலக்கிறது இதனால் குளத்து தண்ணீர் மிகவும் மாசுபட்டு சாக்கடை நீர் போல் கருப்பு நிறத்தில் உள்ளது அந்தத் தண்ணீரை குளிப்பதற்கும் கால்நடைகள் வளர்ப்புக்கும் விவசாயத்திற்கும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் சாக்கடை போன்ற தண்ணீரில் குளிப்பதனால் பொதுமக்களுக்கு ஊரல் அரிப்பு போன்ற தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் பெருகி வருகிறது.
இந்த நிலை நீடித்தால் அந்த நீரை பயன்படுத்தும் சுமார் 20க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராம மக்கள் அனைவருக்கும் காலரா வாந்தி பேதி போன்ற தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பல்லாயிரக்கணக்கான மக்கள் செத்து மடியும் நிலை உள்ளது ஆகவே மாவட்ட ஆட்சித் தலைவர் போர்க்கால அடிப்படையில் குளத்தில் சென்று கலக்கும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து குளத்திற்குள் நல்ல நீராக சென்று சேர்ந்திட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது.

இந் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ்டேவிட் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் மாவட்ட துணைச்செயலாளர் அருள்ராஜ் மாவட்ட பொருளாளர் அருண் சுரேஷ்குமார் மாவட்ட பிரதிநிதி பழனிவேல் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முத்துக்குமார் மாநகரச் செயலாளர் உதய சூரியன் ஶ்ரீவைகுண்டம் ஒன்றிய வர்த்தகர் அணி செயலாளர் சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

