வேதாரண்யத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
வேதாரணியம் ஏப்ரல் 12
நாகை மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதிய உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டு கடந்த 1982ஆம் ஆண்டு முதல சத்துணவு திட்டமாக அமுல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 38 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் மாதந்தோறும் ரூபாய் 9000 ஓய்வூதியம் வழங்க வேண்டும், சமையல் உதவியாளர் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் ஓய்வு பெறுபவர்களுக்கு ஒட்டு மொத்ததொகை ரூபாய் 5 லட்சமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தி தொகுப்பு: டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

