வேதாரணியம் ஏப்ரல் 11
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய கிராமங்களில் 10ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக வேதாரண்யம் பகுதியில் மழை பெய்து வருவதால் உப்புப் பாத்திகள் மழை நீரால் சூழ்ந்து காணப்படுவதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள உப்பு உற்பத்தி பாதிப்பு மீண்டும் தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு மேலாகும் நிலை ஏற்பட்டுள்ளது.. இதனால் உப்பு விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
உப்பளங்களை மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில் உப்பு ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் உப்பு ஏற்றுமதியாளர்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர்.
செய்தி தொகுப்பு: டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்

