பன்னாள் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி- 122 படைப்புகள் மாணவர்களால் காட்சிப்படுத்தபட்டது.
வேதாரணியம் ஏப்ரல் 5
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பன்னாள் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளி வளாகத்தில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மோகனசுந்தரம் வரவேற்றார். அறிவியல் கண்காட்சியை ஸ்ரீகுமரன் ஏஜென்சி ராஜகுமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அறிவியல் கண்காட்சியில் மண்ணின் வெப்பநிலைக்கு ஏற்ப தண்ணீர் பாய்ச்சும் கருவி, போக்குவரத்து சிக்னல் , மூலிகை தாவரங்கள் , பாரம்பரிய உணவு வகைகள் என 122 அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் குரவப்புலம் சித்தமருத்துவர் சரவணகுமரன் – சிவரஞ்சனி தம்பதியரின் பாரம்பரிய நெல் 189 வகைகள் காட்சி படுத்தப் பட்டிருந்தது .அறிவியல் கண்காட்சியையும் பாரம்பரிய நெல் வகைகளின் கண்காட்சியையும் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கண்டு பிரமிப்பு அடைந்தனர்.


அறிவியல் கண்காட்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குமணன்,பள்ளி வளர்ச்சி குழு தலைவர் சண்முகசுந்தரம், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி குழந்தைராசு, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் வில்லவன் கோகோதை , அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சோமசுந்தரம் , பொது விடை செல்வன் , சாந்தி மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் ரவி, செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர் .

