தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியின்
அசத்தலான மக்கள் பணிகள்.. பொதுமக்கள் பாராட்டு…
தூத்துக்குடி,
மார்ச், 28
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் என்ன என்பதை நேரில் பார்த்து அதனை உடனுக்குடன் செய்து கொடுத்து தூள் கிளப்பி வருகிறார் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தூத்துக்குடி மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் இருந்ததால் வார்டு பிரச்சினைகளை கவுன்சிலர்கள் இடமும் ,மேயர் இடமும் பொதுமக்கள்
முறையிட முடியாத சூழ்நிலை உருவாகியிருந்தது
இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும் 60 வார்டுகளுக்கும் மாமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதால் தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை
வார்டு கவுன்சிலர் மற்றும் மேயரிடம் முறையிட ஏதுவாக அமைந்தது. கலைஞரின் முரட்டு பக்தன் என்று அழைக்கப்படும் பெரியசாமி அவர்களின் மகனும்
சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களின் சகோதரருமான ஜெகன் பெரியசாமி தனது தந்தை பெரியசாமி யுடன் இருந்து அரசியல் கற்றவர் முரட்டு பக்தன் பெரியசாமி பின்பற்றிய அரசியல் வியூகங்களை ஜெகன் பெரியசாமி கடைபிடித்து
தூத்துக்குடி மக்கள் பிரச்சினையை தீர்த்து வருகிறார்
இவர் மேயராக பொறுப்பேற்ற நாளிலிருந்து தூத்துக்குடி மாநகரப் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு அதிகாரிகள் குழுவோடு இணைந்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி வருகிறார். குறிப்பாக ஸ்மார்ட் திட்டப்பணிகளை
விரைந்து முடிக்க அறிவுறுத்தி வருவதுடன் மக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதுபோல் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வாகனம் செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆம்புலன்ஸ் வாகனம் எந்தவித நெறிகளுக்கும் ஆளாகாமல் செல்வதற்கு ஏதுவாக நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொண்டார்.
சமூக ஆர்வலர், நோயாளிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இதனை பாராட்டினார்கள்.


சீரான குடிநீர் கொடுப்பதற்கு ஏதுவாக வல்லநாடு நீரேற்று நிலையத்தில் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டு வந்தார். நாள்தோறும் ஒவ்வொரு வார்டு பகுதிகளில் நேரடியாக சென்று அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து அதனை உடனுக்குடன் சீரமைத்து கொடுத்து வருகிறார். அந்த அடிப்படையில்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறான மணல் திட்டுக்கள் அகற்றப்பட்டு, மரங்கள் நடும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி 20 வது வார்டுக்கு உட்பட்ட போல்பேட்டை பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக மணல் திட்டுக்கள் இருப்பதாகவும், அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, அப்பகுதியின் மாமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி நேற்று அங்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறான மணல் திட்டுக்களை அகற்றப்பட்டு இன்று அவ்விடங்களில் மரங்கள் நடப்பட்டது. இந்த மரம் நடும் நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு மரங்களை நட்டு வைத்தார்.

இந்நிகழ்வின் போது சுகாதர அதிகாரி, மற்றும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தூத்துக்குடி மாமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சிக்குட்பட்ட ஒவ்வொரு வார்டு பகுதிகளிலும் நேரடி விசிட் செய்து செய்துவரும் அசத்தலான பணிகளை பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பணி சிறக்க ராயல் சல்யூட்..

