நாகையில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா
வேதாரண்யம் மார்ச் 18
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா முன்னிலை வகித்தார்.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் தின விழாவில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இவ்விழா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு சட்டம் – சட்ட விதிமீறல்கள் கண்டறியும் போட்டி, உணவுப்பொருள் வீணாவதை தடுத்தல் (அ) தவிர்த்தல், தவறான விளம்பரங்களால் பொதுமக்களாகிய நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்த தலைப்புகளை மையமாக கொண்டு ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டிகள் பள்ளி, கல்லூரி அளவில் நடத்தப்பட்டு ஒவ்வொரு போட்டிக்கும் தலா 3 பேர் வீதம் வெற்றி பெற்ற 18 மாணவ மாணவிகளுக்கு மாவட்டஆட்சியர் கேடயம் மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்களையும் வழங்கினார்.


வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு தலைமையிடமான திருச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டு திருச்சி மண்டல அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு மாநிலஅளவிற்கு தேர்வு செய்யப்படுவர்.
தற்போதைய நுகர்வோர் கலாச்சாரம் நமக்கு தேவையில்லாத பொருட்களை வாங்கும்படியாக ஆசைகாட்டி நிர்பந்தம் செய்து நுகர்வோரை தவறான பாதையில் அழைத்துச் செல்கிறது. தேவைக்கான பொருட்களை தயாரிக்கும் காலம் போய் பொருட்களை தயாரித்து விட்டு வாங்கும்படியாக நுகர்வோரை தூண்டுகிறார்கள். விஞ்ஞான வளர்ச்சி மேம்பட்ட காலத்தில் தவறான விளம்பரம் நுகர்வோரை தவறான பாதையில் அழைத்துச் சென்று பொருளாதாரரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். அது மாதிரி விளம்பரங்களை பார்க்கும் பொழுது அதன் உண்மை தன்மையினை அறிந்து அதன்படி பொருட்களை வாங்குபவரே சிறந்த நுகர்வோர் ஆவார் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இவ்விழாவில் மாவட்ட வழங்கல் அலுவலர் தெய்வநாயகி, மரு புஷ்பராஜ், மாவட்ட நியமன அலுவலர் (தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை), நாகப்பட்டினம் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு தலைவர்கள் பாஷ்யம், வேதாரண்யம் வீரசுந்தரம், அரவிந்த்குமார், செல்வராஜ், நாகப்பட்டினம் வட்டவழங்கல் அலுவலர் மாதவன், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

