காவல்துறை, பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட மினி மாரத்தான் போட்டியை தலைமையேற்று கொடியசைத்து துவக்கி வைத்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,
தேனி மாவட்டம்
காவல்துறை, பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த மினி மாரத்தான் போட்டியை தலைமையேற்று தேனி மாவட்ட காவல் அலுவலகத்திலிருந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். மினி மாரத்தான் போட்டியில் பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள், விளையாட்டு வீரர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆண், பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டு ஓடிய மினி மாரத்தான் போட்டி மாவட்ட காவல் அலுவலகத்தில் துவங்கி, மதுரை சாலை சந்திப்பு, புதிய பேருந்து நிலையம் வழியாக, அன்னஞ்சி விலக்கு, அல்லிநகரம், வாணி ஸ்வீட்ஸ் சந்திப்பு வழியாக தேனி நாடார் சரஸ்வதி வித்யாலயா பெண்கள் மெட்ரிக் பள்ளியில் நிறைவடைந்தது. மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களையும், கலந்து கொண்டவர்களையும் ஊக்குவிக்கும் விதமாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிசுகளும் நற்சான்றிதழ்களும் வழங்கி தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.

