ஆசிரியரிடம் இருந்து ஆன்லைன் மூலம் 35000/- அபேஸ் – பணத்தை மீட்ட சைபர் போலீசார் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த ஆசிரியரான மகாராஜன் வயது 57 என்பவருக்கு மொபைலில் நெட் பாங்கிங் செய்யுமாறு லிங்க் ஒன்று வந்ததாகவும், அவரும் நம்பி , அதனை ஓப்பன் செய்து வங்கி விவரங்களையும் ஓடிபி விவரங்களையும் பதிவிட்டதாகவும் பின்னர் அவரது வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 35, 000/ எடுக்கப்பட்டு விட்டதாகவும் இது சம்பந்தமாக அவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த சைபர் கிரைம் போலீசார் மோசடி நபரின் வங்கிக் கணக்கை முடக்கி அவர் இழந்த மொத்த பணத்தையும் மீட்டு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணன் மூலம் வழங்கினர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில் செல்போன் எண்ணிற்கு வரும் குறுஞ்செய்திகளை நம்பி வங்கி விவரங்களை பதிவு செய்ய வேண்டாம் என்று அறிவுரை வழங்கினர்.

