நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- வேதாரண்யத்தில் அமைச்சர் மெய்யநாதன் வாக்கு சேகரிப்பு.
வேதாரணியம்
பிப் 16
எதிர்வரும் 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியில் 21 வார்டுகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. 21 வார்டுகளிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழகம் , இந்திய தேசிய காங்கிரஸ் , மனிதநேய ஜனநாயக கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக சுற்றுச்சூழல்காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன் வாக்கு சேகரித்தார். தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களையும், செயல்படுத்த உள்ள திட்டங்களையும் பட்டியலிட்டு பேசிய அமைச்சர் குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை 1,000 ரூபாய் விரைவில் வழங்கப்படும் என பேசினார். வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட தோப்புத்துறை பெருமாள்கோயில், ஆறுகாட்டுத்துறை, வேதாரண்யம் மேலவீதி, மணியன் தீவு, அகஸ்தியன் பள்ளி மன்மதன் கோயில், மற்றும் மறைஞாயநல்லூர் பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி வாக்காளர்களிடம் அந்தந்த வார்டுகளில் வேட்பாளராக போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார் . இதில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் எஸ் .கே. வேதரத்தினம் , என் வி காமராஜ் , தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் N.கெளதமன்,மாவட்ட விவசாய அணி பொறுப்பாளர் எல்.எஸ்.இ. பழனியப்பன்,வேதாரண்யம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் உதயம் முருகையன் , திமுக நகர கழக செயலாளர் மா.மீ.புகழேந்தி ,மா.மீ.அன்பரசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

