பஹ்ரைன் நாட்டிற்கு முதல்வர் ஸ்டாலினை அழைத்த பஹ்ரைன் தமிழர் நல அமைப்பு.
நாகப்பட்டினம்
பிப் 14
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களால் வெளிநாடு வாழ் தமிழர் நல அமைப்பின் (NRTIA) பஹ்ரைன் நாட்டுப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள *முஹம்மது ஹுசைன் மாலிம்*
தமிழ்நாடு முதல் அமைச்சர் மாண்புமிகு மு.க ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்துக்களைப் பெற்றார்..
புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த சங்கத்தின் மூலம். உலகில் வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கவும், வேலை வாய்ப்புகள் தேடி, வெளிநாடு வரும் தமிழர்களுக்கு பாதுகாப்பு அரணாகவும் விளங்கும், இந்த சங்கம் அமைத்த முதல்வர் அவர்களுக்கு மாலிம் நன்றிகளைக் கூறினார்..
மேலும் ஏறக்குறைய 80 ஆயிரம் தமிழர்கள் வாழும், முத்துத்தீவு என்று அழைக்கப்படும், பஹ்ரைன் நாட்டிற்கு, தமிழ்நாட்டின் முதல்வர் வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
சந்திப்பின் போது, நாகை சட்டப் பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் MGK நிஜாமுதீன் உடன் இருந்தார்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

