தூத்துக்குடியில் மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
வருகின்ற 19.02.2022 அன்று நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் தென்பாகம் காவல் நிலையத்தில் தொடங்கி வி.வி.டி சிக்னல், அண்ணாநகர், கே.வி.கே நகர், 4ம் கேட் ஜங்ஷன், குறிஞ்சி நகர் வழியாக சிட்டி டவர் ஜங்ஷன் அருகிலுள்ள வி.எம்.ஜே மஹாலில் வந்து நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து வி.எம்.ஜே மஹாலில் வைத்து கொடி அணிவகுப்பில் கலந்து கொண்ட காவல்துறையினருக்கு தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து எஸ்பி அறிவுரைகள் வழங்கினார்.
கொடி அணிவகுப்பில் நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், காவல் நிலைய ஆய்வாளர்கள் தென்பாகம் ஆனந்தராஜன், மத்தியபாகம் ஜெயபிரகாஷ், வடபாகம் ரபி சுஜின் ஜோஸ், போக்குவரத்து பிரிவு மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர்கள் தென்பாகம் சிவக்குமார், மத்தியபாகம் முத்துகிருஷ்ணன், வடபாகம் செல்வராஜ், ராமலிங்கம், போக்குவரத்து பிரிவு வெங்கடேஷ், நாகராஜன், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் மற்றும உள்ளூர் போலீசார் உட்பட 70 பேர் கலந்து கொண்டனர்.

