தலைஞாயிறு பேரூராட்சியில் அமைச்சர் மெய்யநாதன் வாக்கு சேகரிப்பு.
வேதாரணியம்
பிப் 10
எதிர்வரும் 19ஆம் தேதி நடைபெற இருக்கிற உள்ளாட்சி தேர்தலில் நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் 15-வார்டு களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் தமிழக சுற்றுச்சூழல்மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் திறந்த வேனில் வாக்கு சேகரித்தார். தமிழக அரசின் நலத் திட்டங்கள் அனைத்தையும் விரிவாக பேசி வாக்காளர்களிடம் ஓட்டு சேகரித்தார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் மதிவாணன், நாகை மாவட்ட கழக பொறுப்பாளர் கௌதமன், தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் மகா. குமார் தலைஞாயிறு பேரூராட்சி முன்னாள் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

