மகாத்மா காந்தியின் 75 வது நினைவு தினத்தை ஒட்டி கன்னியாகுமரி செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டிலுள்ள காந்தி நினைவு மண்டபத்தில் அவரது திருவுருவ படத்திற்கு குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் உடன் நாகர்கோயில் வருவாய் கோட்டாட்சியர் சேது ராமலிங்கம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் ஜான் ஜெகத் பிரைட், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் சேகர், உதவி மக்கள் தொடர்பு துறை அலுவலர் லேனின்பிரபு ஆகியோர் உடனிருந்தனர்.

