ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில்
பாலக்காடு விரைவு ரயில் நிற்காமல் செல்வதை கண்டித்து பொதுமக்களுடன் இணைந்து ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ். அமிர்தராஜ் கண்டன ஆர்ப்பாட்டம்!!
கருங்குளம் ஜனவரி 25
ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில்
பாலக்காடு விரைவு ரயில் நிற்காமல் செல்வதை கண்டித்து பொதுமக்களுடன் இனைந்து ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ். அமிர்தராஜ் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
கருங்குளம் ஒன்றியம் செய்துங்கநல்லூரில் அஞ்சல் நிலையம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாலக்காடு விரைவு இரயில் திருவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட திருவைகுண்டம், தாதன்குளம், செய்துங்கநல்லூர் ஆகிய இரயில் நிலையங்களில் நிற்காமல் செல்வதை கண்டித்து பொதுமக்கள் தென்னக ரயில்வே விடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் அவர்களிடம் அப்பகுதி பொதுமக்கள் முறையிட்டனர். இதனையடுத்து இன்று பொதுமக்களுடன் இனைந்து
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரும் தெற்கு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான ஊர்வசி அமிர்தராஜ்
தலைமையில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் *ஊர்வசி.S.அமிர்தராஜ் MLA* கலந்து கொண்டு இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் பொதுமக்கள் வர்த்தகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் கேட்டறிந்து களப்பணி ஆற்றி வரும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருக்கு தொகுதி முழுவதும் பொதுமக்கள் சார்பில் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் வாழ்த்துக்கள் குவிகிறது. ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் செல்லப்பிள்ளையாக ஊர்வசி அமிர்தராஜ் விளங்கி வருகிறார்..
செய்தி தொகுப்பு எம் . ஆத்திமுத்து

