• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஜீ தமிழ் சேனலுக்கு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நோட்டீஸ்

policeseithitv by policeseithitv
January 20, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஜீ தமிழ் சேனலுக்கு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நோட்டீஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் வகையில் குழந்தைகளை வைத்து நிகழ்ச்சி ஒளிபரப்பிய ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக பாஜக ஐடி பிரிவு தலைவர் சி.டி.நிர்மல்குமார்  மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு அனுப்பிய புகார் மனுவில், “கடந்த ஜனவரி 15 ஆம் தேதி ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பானது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவர்கள் பிரதமர் மோடியை பகடி செய்தனர்.அவர் மீது மோசமான விமர்சனங்களை முன்வைத்தனர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள், அவரின் ஆடைகள், தனியார் மயமாக்குதல் கொள்கை ஆகியனவற்றை விமர்சித்து சிறுவர்கள் பேசி நடித்தனர். 10 வயதே நிரம்பிய அந்த சிறாருக்கு நிச்சயமாக அவர்கள் பேசியதன் அர்த்தம் தெரிந்திருக்காது. இது தவறான செய்தியைக் கடத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் குறிப்பிட்ட அந்த அத்தியாயத்தை சேனல் திரும்பப் பெற வேண்டும். அத்துடன் பொது மன்னிப்பும் கோர வேண்டும்.
சேனல், நிகழ்ச்சி தயாரிப்பாளர், நிகழ்ச்சியின் நீதிபதிகள் என அனைவருமே தண்டிக்கப்பட வேண்டும். குழந்தைகளை அரசியல் கொள்கைகளைப் பரப்புவதற்காகப் பயன்படுத்தக்கூடாது. எங்களது மவுனம் நாங்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொள்வதாகக் கருதப்படக்கூடாது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார். இந்நிலையில், பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் வகையில் குழந்தைகளை வைத்து நிகழ்ச்சி ஒளிபரப்பிய தனியார் தமிழ் சேனலுக்கு, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Previous Post

தூத்துக்குடி மாவட்டத்தில் முக கவசம் அணியாத 435 பேருக்கு ரூ.87ஆயிரம் அபராதம்

Next Post

தமிழகத்தில் வருகிற 22ம் தேதி பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை

Next Post
தமிழகத்தில் வருகிற 22ம் தேதி பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை

தமிழகத்தில் வருகிற 22ம் தேதி பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In