வேதாரண்யத்தில் 417 பேருக்கு நலத்திட்ட உதவிகள் – அமைச்சர் சிவ. வீ ,மெய்யநாதன் வழங்கினார்.
வேதாரணியம் ஜன 19
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு நாகை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அருண் தம்புராஜ் தலைமை வகித்தார். மீன் வளர்ச்சி கழக தலைவர் என். கௌதமன் முன்னிலை வகித்தார்.

ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் வகையில் செயல்படும் தமிழக அரசு என பேசிய சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன் சமூக நலத்துறை சார்பில் 346 பேருக்கு 2 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சமூக பாதுகாப்பு திட்டம் தோட்டக்கலைத்துறை, மகளிர் திட்டம் என 417 பேருக்கு 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாலிக்கு தங்கம் தையல் மெஷின், முதியோர் உதவித்தொகை என சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினார். இவ்விழாவில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ் .கே. வேதரத்தினம், என்வி காமராஜ் , திமுக வேதாரணியம் ஒன்றிய கழக செயலாளர் என்.சதாசிவம் ,மேற்கு ஒன்றிய கழக செயலாளர் உதயம் முருகையன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் எல்.எஸ்.இ. பழனியப்பன், வேதாரண்யம் நகர கழக செயலாளர் புகழேந்தி,வழக்கறிஞர் பிரிவு மா.மீ.அன்பரசு, மற்றும் வருவாய்த்துறையினர், ஊரக உள்ளாட்சித் துறையினர், சுகாதாரத்துறையினர் மற்றும் மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் மு. தனபால் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

