ஓசூர் அருகே மலைகிராம கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு : கர்ப்பிணி பெண்கள் நெகிழ்ச்சி
ஓசூர் அருகே காமகிரி மலைக்கிராமத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு இருபத்தியோரு வகையான சீர் பொருட்கள் வழங்கி மருத்துவர்கள் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் கலந்துகொண்ட கர்ப்பிணி பெண்கள் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.
ஓசூர் அருகே பெட்டமுகிலாலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காம கிரி மலைக்கிராமத்தில் தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் தலைமையிலான குழுவினர், 180க்கும் மேற்பட்ட மலைக்கிராம கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர்.

இதில் பெட்டமுகிலாளம், கொடகரை, காமகிரி, ஆலள்ளி, போலகொல்லை, கருக்கா கொல்லை, சித்தா புரம், கோட்டையூர் கொல்லை, ஜெய் புரம், தொழுவமலை மற்றும் குள்ளட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் இருந்து வந்திருந்த மூன்று மாதம் முதல் ஒன்பது மாதம் வரையிலான கர்ப்பிணி பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், சந்தனம் குங்குமம் பூசி, கைகளில் வளையல்கள் மாட்டி, பலவகையான உணவு, இனிப்பு, காரம், வளையல்கள், ஜாக்கெட் துணி உள்ளிட்ட 26 வகையான சீர் வகைப் பொருட்கள் வழங்கப்பட்டது

