தமிழக காவல்துறை டிஜிபி ஜே.கே.திரிபாதி மகன் திருமணவிழா:
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மணமக்களை நேரில் வாழ்த்தினார்.
தமிழக காவல்துறை தலைமை இயக்குநராக பணியாற்றி வரும் ஜே.கே.திரிபாதி இ.கா.ப. அவர்களின் மகன் ஜீத்வன் – சுமுகி ஆகியோரது திருமண விழா நேற்று (22.01.2021) சென்னையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி மணமக்களை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்தினார். முன்னதாக, திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்த தமிழக முதல்வரை தமிழக டிஜிபி திரிபாதி குடும்பத்தினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

செய்தி: செய்தி ஆசிரியர் எம்.ஆத்திமுத்து

