தட்டாப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக தகராறு செய்து தாக்கி ஜாதி பெயரை கூறி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது.
♻️ தூத்துக்குடி வர்த்தகரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் முத்து (21) என்பவருக்கும், தூத்துக்குடி மேல வாகைகுளம் பகுதியை சேர்ந்த தர்ம குட்டி மகன் ஆறுமுக நயினார் (21) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
♻️ இந்த முன்விரோதம் காரணமாக நேற்று (21.11.2021) ஆறுமுக நயினார் (21) மற்றும் அவரது நண்பர்களான மேல வாகைக்குளம் பகுதியை சேர்ந்த சங்கர் மகன் லட்சுமணன் (20) முடிவைத்தானேந்தல் யாதவர் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன்களான முத்துமாலை (21), பார்வதி ராஜா (19) மற்றும் சிலர் சேர்ந்து முத்துவின் வீட்டிற்கு சென்றபோது, முத்து வீட்டில் இல்லாததால், அவரது தந்தையான சுப்பிரமணியனிடம் தகராறு செய்து தாக்கி ஜாதிப் பெயரை கூறி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.
♻️ இதுகுறித்து முத்துவின் தந்தையான சுப்பிரமணியன் (55) என்பவர் அளித்த புகாரின் தட்டப்பாறை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. சந்தீஸ் இ.கா.ப அவர்கள் உத்தரவின்படி தட்டப்பாறை காவல் நிலைய போலீசார் மேற்படி எதிரிகளில் லட்சுமணன், முத்துமாலை மற்றும் பார்வதி ராஜா ஆகிய 3 பேரையும் கைது செய்தார். மேலும் இதில் சம்மந்தப்பட்ட மற்ற எதிரிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

