குற்றாலத்தில் காவல்துறையினரின் பேரிடர் மீட்பு ஒத்திகை நடைபெற்றது
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வரும் நிலையில் நீர்நிலைகள் மற்றும் அணைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறுவதால் தென்காசி மாவட்ட பொதுமக்களின் பாதுகாப்பு நலனைக் கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் சிசில் தலைமையில் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐந்தருவி செல்லும் சாலையில் அமைந்துள்ள படகு குழாமில் வைத்து வைத்து பேரிடர் மீட்பு ஒத்திகை நடைபெற்றது.
இந்த ஒத்திகையில் நீர் நிலைகளில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்பது குறித்தும் அவ்வாறு மீட்கப்பட்ட நபர்களை முதலுதவி அளித்து எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பது குறித்தும் ஒத்திகை நடைபெற்றது.இதுகுறித்துக் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில் நீர்நிலைகளில் சிக்கித் தவிக்கும் பொது மக்களை காக்கும் பொருட்டு இந்த ஒத்திகை நடைபெற்றது எனவும், இவ்வாறு ஒருவர் சிக்கிக் கொண்டால் நீங்கள் மீட்புக்குழு வரும் வரை காலம் தாமதிக்காமல் வீட்டில் இருக்கும் தெர்மாகோல், வாட்டர் கேன் போன்ற மிதப்பான்களை பயன்படுத்தி தற்காத்துக் கொள்வது குறித்து அனைவரும் தெரிந்திருக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

