
விளாத்திகுளம் உட்கோட்டத்தில் கொலை முயற்சி மற்றும் போக்சோ வழக்கில் ஈடுபட்ட 2 எதிரிகள் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து அதிரடி நடவடிக்கை.
???? கடந்த 25.09.2021 அன்று எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காட்டுநாயக்கன் பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் மாரிச்செல்வம் (25) என்பவர் முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டது மேலும் எதிரி மீது பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த நிலையில் எப்போதும் வென்றான் காவல் நிலைய போலீசார் மாரிசெல்வத்தை கைது செய்தனர்.
???? கடந்த 24.09.2021 அன்று விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விளாத்திகுளம் ஆற்றங்கரை கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் சரத்குமார் (24) என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டதாக சரத்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர் .
???? மேற்படி எப்போதும்வென்றான் காவல் நிலைய வழக்கில் ஈடுபட்ட எதிரி மாரிச்செல்வம் மீதும், அனைத்து மகளிர் காவல் நிலைய வழக்கில் ஈடுபட்ட எதிரி சரத்குமார் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க விளாத்திகுளம் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் அறிவுரைப்படி எட்டையாபுரம் காவல்நிலைய ஆய்வாளர் திரு.ஜின்னா பீர் முகமது மற்றும் விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கலா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
???? மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
???? அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில் ராஜ் இ.ஆ.ப அவர்கள் காட்டுநாயக்கன் பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் 1)மாரிச்செல்வம் , விளாத்திகுளம் ஆற்றங்கரை கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் 2)சரத்குமார் ஆகிய 2பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மேற்படி எதிரிகள் 2பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இதுவரை விளாத்திகுளம் உட்கோட்டத்தில் மட்டும் கடந்த 10 மாதங்களில் 13பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

