• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மெரினா கடற்கரையில் உயிரிழப்பை தடுக்க மீட்புபணிகளின் ஒத்திகை நிகழ்ச்‌‌‌சி

policeseithitv by policeseithitv
October 21, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மெரினா கடற்கரையில் உயிரிழப்பை தடுக்க மீட்புபணிகளின் ஒத்திகை நிகழ்ச்‌‌‌சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின் படி சென்னை காவல் துறையில் பல்வகை குழு அடங்கிய மூழ்குதல் தடுப்புப் பிரிவினரின் மீட்பு பணியின் செயல்விளக்கத்தை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பொதுமக்கள் பெருமளவில் கூடும் சென்னை மெரினா கடற்கரை உலகிலேயே இரண்டாவது பெரிய கடற்கரையாகும். இதைத் தவிர எண்ணூர், பெசன்ட் நகர், திருவான்மியூர் மற்றும் பாலவாக்கம் பகுதியில் உள்ள கடற்கரைகளிலும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்வையிட வருகை தருவது வழக்கம்.

பொதுவாக இக்கடற்கரையோரங்களில் ஆழம் அதிகமாக இருக்கும். அதன் காரணமாக அலையின் வேகமும் சற்று மிகுதியாக இருக்கும். கடற்கரைக்கு வருபவர்களில் சிலர் உற்சாக மிகுதியால் கடலின் உள்ளே இறங்கும்போது அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி தங்கள் உயிரை இழக்கும் துயரச் சம்பவங்கள் தொடர்கதையாக நடைபெற்று வருகின்றன.

சென்னை பெருநகரில் அடையாறு, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பூக்கடை, வண்ணாரப்பேட்டை மற்றும் மாதவரம் ஆகிய 5 காவல் மாவட்டங்களில் உள்ள 13 காவல் நிலையங்கள் கடற்கரை பகுதிகளை உள்ளடக்கியுள்ளன. இக்காவல் நிலையங்களில் நீரில் மூழ்கி காணாமல் போனவர்கள் மற்றும் இறந்தவர்கள் பற்றிய வழக்குகள் அடிக்கடி பதிவாகி வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் (2016 முதல்) 506 வழக்குகள் பதிவாகியுள்ளன. காவல்துறையினர் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டபோதிலும், ஒவ்வொரு ஆண்டும் இத்துயரச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

இச்சம்பவங்களை முற்றிலும் தடுக்கவும், பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கவும், தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, இ.கா.ப . சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப மற்றும் கடலோர காவல் படை கூடுதல் காவல் துறை இயக்குநர் சந்தீப் மித்தல், இ.கா.ப ஆகியோர் இன்று காலை 11.000 மணியளவில் “பல்வகை குழு அடங்கிய மூழ்குதல் தடுப்புப் பிரிவினரின்” (Anti Drowning Unit) மீட்பு பணியின் செயல்விளக்கத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினர்.

இத்தடுப்புப் பிரிவின் செயல்பாடுகள் சம்பவத்திற்கு முன், சம்பவத்தின் போது மற்றும் சம்பவத்திற்குப் பின் என மூன்று நிலைகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு நிலையிலும் செயல்படுத்தப்பட வேண்டிய சில திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.

சம்பவத்திற்கு முன் திட்டத்தில் கடலில் இறங்குவதற்கு தடை விதித்தல், அறிவிப்புப் பலகைகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உயிர்காக்கும் உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருத்தல், ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தல் ஆகிய திட்டங்களைக் கொண்டிருக்கும். சம்பவத்தின் போது உடனடியாக மீட்பு குழுவினர் தக்க இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டவர்களை மீட்பார்கள். சம்பவத்திற்குப் பின் திட்டத்தில் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டவர்களுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மருத்துவ குழுவினர் உடனடியாக முதலுதவி சிகிச்சையளித்து காப்பாற்றுவர்கள்.

இத்தடுப்புப் பிரிவில் காவல்துறை, கடலோர காவல் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், மீனவர்கள், நீச்சல் தெரிந்தவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் முதலுதவி குழுவினர் ஆகியோர் இடம்பெற்றிருப்பார்கள். மீட்புப் பணிக்காக கட்டுமரம், உயிர்காக்கும் உடைகள், அதிவேக படகுகள், மிதவைப் படகுகள், கயிறுகள் போன்ற பல்வேறு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், மேற்படி 13 காவல் நிலைய பகுதிகளுக்குட்பட்ட கடற்கரையோரங்களில் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் கடல்சார் பல்கலைக் கழகத்தின் தொழில் நுட்ப உதவியுடன் கண்காணிப்பு கோபுரங்கள் வடிவமைக்கப்பட்டு 14 இடங்களில் மேற்படி கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவப்பட உள்ளன.
மேலும், ஒவ்வொரு காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு காவலர் சாதாரண உடையில் பொதுமக்களை எச்சரிக்கை செய்யும் வகையில் கடற்கரை ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவார். மேலும் உழைப்பாளர் சிலை, காந்தி சிலை மற்றும் எலியட்ஸ் கடற்கரை ஆகிய மூன்று இடங்களில் புறக்காவல் நிலையம் அமைத்து, ஆளில்லா குட்டி விமானம் மூலம் கடற்கரைப் பகுதிகள் கண்காணிக்கப்படும். மேலும் சென்னை மாநகராட்சி உதவியுடன் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தானியங்கி எச்சரிக்கை வீடியோக்கள் நிறுவப்படும்.

மேலும் கடல் அலைகளின் தன்மை, அலைகளின் தீவிரம் ஏற்படும் நாட்கள், மற்றும் ஆபத்து நிறைந்த ஆழமான பகுதிகள் போன்றவற்றை பற்றி ஒரு விரிவான ஆராய்ச்சியை தேசிய பெருங்கடல் தொழில் நுட்ப நிறுவனம், கடல்சார் பல்கலைக் கழகத்தின் வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மூலம் மேற்கொண்டு அறிக்கைப் பெறப்பட உள்ளது. இந்த ஆய்வறிக்கையின் முடிவுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் துல்லியமாக மேற்கொள்ள உதவிகரமாக இருக்கும்.

Previous Post

தூத்துக்குடி மாவட்டம், தென்பாகம் காவல் நிலையத்தில் எஸ்பி எஸ்.ஜெயக்குமார் தலைமையில் ‘காவலர் வீர வணக்க நாள்” உறுதிமொழி ஏற்பு

Next Post

110 நவீன C.C.T.V கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோதா,I.P.S., துவக்கிவைத்தார்

Next Post
110 நவீன C.C.T.V கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோதா,I.P.S., துவக்கிவைத்தார்

110 நவீன C.C.T.V கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோதா,I.P.S., துவக்கிவைத்தார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In