வேதாரண்யம் பகுதியில் இரண்டு கூட்டுறவு அங்காடிகளை திறந்து வைத்தார் ஓ எஸ் மணியன் எம்எல்ஏ
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு ஒன்றியத்துக்குட்பட்ட தலைஞாயிறு சந்தானம் தெருவில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கூட்டுறவு அங்காடி விற்பனை நிலையத்தை முன்னாள் அமைச்சரும் , எம்எல்ஏவுமான ஓ .எஸ். மணியன் திறந்து வைத்தார் .

பிறகு வெள்ளப்பள்ளம் கிராமத்தில் 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கூட்டுறவு அங்காடியையும் திறந்துவைத்தார். இதில் கூட்டுறவு சங்க செயலாளர்கள் கலியபெருமாள் . பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

