கோடியக்கரையில் வன உயிரின வார விழா .வன உயிரினங்களை பாதுகாக்க உறுதி ஏற்பு.
வன உயிரின வார விழாவை முன்னிட்டு நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலய நுழைவு வாயிலில் வன உயிரின வார விழா நடைபெற்றது. நாகப்பட்டினத்திலிருந்து இருசக்கர வாகன பேரணியில் வந்த வனத்துறையினரை நாகை மாவட்ட வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் வன உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்கான உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் கோடியக்கரை மற்றும் கோடியக்காடு கிராமங்களைச் சேர்ந்த வனக் குழுவில் உள்ள பெண்கள் கலந்து கொண்டனர். வனச்சரகர் கள் ஜோசப் டேனியல்,அயூப் கான் வனவர் சதீஷ்குமார், செல்லையா, பாலசுப்பிரமணியன் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டனர்.

