கொரோனா இல்லாத தூத்துக்குடி ஒரே நாளில் 7000 பேருக்கு கபசுரக்குடிநீர் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
கொரோனா இல்லாத தூத்துக்குடி சார்பில் இன்று 5000 பேருக்கு கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி 2020 ஜூலை 23 ;கொரோனா இல்லாத தூத்துக்குடி சார்பில் இன்று கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
கொரோனா எதிரொலியால் ஏழை முதல் பணம் படைத்தவன் முதல் அஞ்சி நடுங்குகிறது..சிறு குழந்தையெனினும் தூக்கி சென்று பல நாட்கள் தாய் தந்தையினரை பிரிந்து கிடக்கும் பரிதாபம்….
வாழும் போதும் நிம்மதி இல்லாமல் இறந்தும் யாரும் அருகே வரமுடியாமல் கொடுமையான கால கட்டத்திலிருந்து விடுபடுவதற்க்காக கொரோனா இல்லாத தூத்துக்குடி என்ற அமைப்பு முயற்சி எடுத்துள்ளது.
கொரோனா இல்லாத தூத்துக்குடி என்ற அமைப்பு சார்பில் தூத்துக்குடி மாவட்ட முழுவதும் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு இன்று கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி கீழ சண்முகபுரத்தில் வானவில் ஸ்டோர் அருகில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கிவைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வீடு வீடாக சென்று 3 நாட்கள் தொடர்ச்சியாக நம்பகதன்மையுடைய மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட ,80 வருட பாரம்பரியமான கபசுர குடிநீரை..அரசின் வழிகாட்டுதலின் படி வழங்கப்பட்டது.
கபசுரக்நீரை தயார் செய்வதற்கு சுமார் 3 முதல் 4 மணி வரை செலவாகிறது.முதல் கட்டமாக கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சண்முகபுரம் பகுதியில் சுமார் 5000 பேருக்கு இன்று வழங்கப்பட்டது.
இந்த பகுதி மக்களுக்கு நாளையும்,நாளை மறுநாளும் மொத்தம் 3 நாட்கள் கபசுரக்குடிநீர் வீடுவீடாகச் சென்று தன்னார்வலர்கள் வழங்க விருக்கிறார்கள்.இந்த நிகழ்விற்கு இந்தியன் ஆபீஸர்ஸ் கிளப் செயலாளர் அந்தோணிராஜ், வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல்,ஜெயபால், இசையமைப்பாளர் சீலன் ஸ்ருதி போன்றோர் முன்னிலை வகித்தார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை கொரோனா இல்லாத தூத்துக்குடி என்ற அமைப்பு நிர்வாகிகள் பொன்.முருகன்,பத்திரிகையாளர் செ.ஜெகஜீவன் மற்றும் தன்னார்வலர்கள் வக்கீல் சசிக்குமார் ,சங்கர்,,மணிமாறன்,,வினோத்,, பீர் முகம்மது நியாஸ்,,செல்வபாரதி,அமீர்,அசோக்,ஆல் கேன் செந்தில்குமார் பாலா, தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் சண்முகசுந்தரம், செயற்குழு உறுப்பினர் ராஜா சாலமோன், செயற்குழு உறுப்பினர் ஆத்திமுத்து ,அலெக்ஸ், நிருபர்கள் கண்ணன் நீதிராஜன், ஜெ ராஜு ,உட்பட பலர் முன்னின்று செய்தனர். . சண்முகபுரம் பகுதிகளில் மேலும் 2 நாள்கள் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. வருகிற 26/07/2020 அன்று பிரையன்நகர் பகுதிமக்களுக்கு கபசுர குடிநீர் தொடர்ச்சியாக வழங்கப்படுகிறது. கொரோனா இல்லாத தூத்துக்குடி நிகழ்வு மூலம் பொதுமக்களின் நலன் கருதி நோய் எதிர்பு சக்தியான கபசுர குடிநீர் தூத்துக்குடி மக்களுக்கு வழங்கி வரும் முயற்சியாளர்கள் அனைவருக்கு மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் சண்முகபுரம் பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர் .
செய்தித்தொகுப்பு எம் ஆத்திமுத்து

