தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடைய நாகை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
நாகை மாவட்டம், பாப்பாகோவில் சர் ஜசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் வரும் 5ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
நாகை மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 5ஆம் தேதி நாகப்பட்டினம் பாப்பாகோவில் சர் ஜசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் நடக்கிறது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதிலிருந்து 40 வயதிற்குள் ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம் . 8, 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி, பிஏ, பிஎஸ்ஸி பிகாம் பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் படித்துள்ள வேலையற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார் துறையை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களுடைய கல்வி தகுதி குறித்த விவரங்கள் முன்னரே பதிவு செய்து கொள்ளலாம். மேலும் 04365-252701 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அந்த அறிக்கையில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
செய்தி தொகுப்பு: நாகை மாவட்ட செய்தியாளர்
டாக்டர் ஜா.எல்விஸ் லாய் மச்சோடா


