சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், முழு ஊரடங்கையொட்டி அண்ணாசாலை, ஸ்பென்சர் சிக்னல் அருகே நடைபெற்று வரும் காவல் குழுவினரின் வாகன தணிக்கை பணிகளை பார்வையிட்டு, செய்தியாளர்களை சந்தித்தார்.
சென்னையில் முழு ஊரடங்கையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர்
முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் அண்ணாசாலை, ஸ்பென்சர் சிக்னல் அருகில் காவல் குழுவினர் மேற்கொண்டு வரும் வாகனத் தணிக்கை பணிகளை பார்வையிட்டார்.
மேலும், ஊரடங்கு விதிமீறல் வழக்குகள், சில கட்டுப்பாடுகளால் ஏற்படக்கூடிய அசௌகரியங்கள் ஆகியவற்றை அனைவரும் பொறுத்துக்கொண்டு, கெரோனா இல்லாத ஒரு நல்ல சூழலை உருவாக்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது கிழக்கு மண்டல இணை ஆணையாளர் திரு.R.சுதாகர், இ.கா.ப., மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.
செய்தி தொகுப்பு
தலைமை செயலக செய்தியாளர்கள்
ஆர்.ஆனந்தபாபு, எம்.ஆர்.ஜெயபால்

