• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் சி.த.சுந்தரபாண்டியன் தலைமையில் காமராஜர் மார்க்கெட் வியாபாரிகள் கடையை அடைத்து சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர்

policeseithitv by policeseithitv
August 13, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் சி.த.சுந்தரபாண்டியன் தலைமையில் காமராஜர் மார்க்கெட் வியாபாரிகள் கடையை அடைத்து சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மாட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து தரப்பினரும் வந்துசெல்லும் பழமையான காமராஜர் காய்கனி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள சாலையில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த மார்க்கெட்டிற்கு பிரதான மெயின் பாதைகள் இரண்டு இருந்து வருகின்றன. அதில் ஒரு பாதையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் உள்ள சிறு, குறு விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளைந்த வாழை, உள்ளிட்ட அனைத்து வகையான காய்கனிகள் தினமும் சிறிய நடுத்தர, கனரக வாகனம் மூலம் மொத்தவிற்பனை மற்றும் சில்லறை விற்பனைக்காக இந்த மார்க்கெட்டிற்கு தினமும் கொண்டு வருகின்றனர். அதன் மூலம் பல வியாபாரிகள் தொழிலாளர்கள், பொதுமக்கள் குறைந்த விலையில் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். உற்பத்தி செய்து கொண்டு வரும் விவசாயிகளுக்கும் நல்ல விலைக்கு பொருட்களை வாங்குகின்றனர். மாநகராட்சி மூலம் செயல்படுத்தும் புதிய கான்கிரீட் சாலையில் மத்தியில் தடுப்புச்சுவர் அமைத்து சாலை போடுவதால் வெளியில் இருந்து விவசாயிகள் கொண்டு வரும் இடுபொருட்களின் வாகனங்கள் மார்க்கெட்டிற்கு கொண்டு வர இயலாத நிலை ஏற்படும். அதைமாநகராட்சி நிர்வாகம் அந்த குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தடுப்புச் சுவர் இல்லாமல் சாலைகள் அமைக்க வேண்டும் என்று மார்க்கெட் நிர்வாகத்தின் சார்பில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

திடீரென மீண்டும் தடுப்புச் சுவர் கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டதால் காமராஜர் காய்கனி மார்க்கெட் தலைவர் சி.த.சுந்தரபாண்டியன் தலைமையில் பாளை மெயின் ரோட்டில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுடன் அமர்ந்து தடுப்புச்சுவர் திட்டத்தை கைவிட வேண்டும் என்று மறியல் போராட்டம் நடத்தினார். அவருடன் மார்க்கெட் மேலாளர் நியூட்டன், துணை மேலாளர் ரவி, மற்றும் பிச்சமுத்து, செல்வகுமார், ரவி, ராஜாசிங், பிரபாகர், ஞான்ராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேரும் பெருமாள் மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறியல் போராட்டத்தை கைவிடச் செய்தனர். பின்னர் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ அவர்களை சந்தித்த நிலையில் ஆணையர் சாருஸ்ரீ பிரச்சனைக்குரிய இடத்தை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தபின் உங்களது கோரிக்கையை நிறைவேற்றி தருவேன். உங்களுடைய தொழில் பாதிக்காத வகையிலும் பொதுமக்கள் நலன் கருதியும் நல்ல முடிவை எடுப்பேன் என்று ஆணையர் சாருஸ்ரீ கூறினார். சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் வியாபாரிகள் கடை அடைத்து ஈடுபட்டனர்.

Previous Post

தூத்துக்குடி மாவட்டத்தில் 12 கோவில்களில் தங்க நகை மற்றும் வெள்ளி சாமான்கள் திருடிய 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது – ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள 20 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் மீட்பு – விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் மற்றும் போலீசாரை பாராட்டிய எஸ் பி ஜெயக்குமார்

Next Post

வெளிமாநிலங்களில் மீட்கப்பட்ட 11 நபர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

Next Post
வெளிமாநிலங்களில் மீட்கப்பட்ட 11 நபர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

வெளிமாநிலங்களில் மீட்கப்பட்ட 11 நபர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In