தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் மாற்றப்பட்டு புதிய பிஆர்ஓ-வாக ஜெகவீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிர்வாக நலன் கருதி, இராமநாதபுரம் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரியும் ஜெகவீர பாண்டியன் அங்கிருந்து இடமாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணிபுரியும் வெ.சீனிவாசன் பணியிடத்தில் பணியமர்த்தம் செய்து ஆணையிடப்படுகிறது.

ஜெகவீரபாண்டியன், இராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பணிப் பொறுப்பிலிருந்து 30.07.2021-அன்று பிற்பகல் விடுவிக்கப்படுகிறார். இவ்வாணை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றியவர். இந்த காலகட்டத்தில் பத்திரிகையாளர்களிடம் சுமூகமான நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டு செயலாற்றினார். பத்திரிகையாளர்களுக்கு ஒரு இணைப்பு பாலமாக இருந்து அரசின் செயல் திட்டங்கள், சாதனைகள் ஆகியவற்றை அனைத்து தரப்பு மக்களுக்கும் உடனுக்குடன் எடுத்து சென்றுள்ளார். இதனால் இவரை மாவட்ட நிர்வாகம் மற்றும் பத்திரிகையாளர்கள் வெகுவாக பாராட்டியதும் உண்டு. ராஜபாளையம், வில்லிவாக்கம் போன்ற சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.சுப்பு-வின் மகன் ஜெகவீரபாண்டியன் ஆவார். இவர் ஏற்கனவே தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
செய்தி தொகுப்பு: எம். ஆத்திமுத்து

