ஆவடி அருகே குடிபோதையில் இரும்பு பைப்பால் காவலாளியின் மண்டையை உடைத்த இளம்பெண் – வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த ஆவடி ஸ்ரீதேவி நகரை சேர்ந்த புருசோத்தமன் என்பவர் சேக்காடு கிராமத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு புருசோத்தமன் காவல் பணியில் இருந்த போது அங்கு வசிக்கும் இளம்பெண் தனது தோழி மற்றும் இரு இளைஞர்களுடன் மதுபோதையில் வளாகத்துக்குள் வந்ததாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த புருஷோத்தமன் அவர்களுக்கு அறிவுரை கூற முற்பட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடை்நத அவர்கள் கைகளால் தாக்கியதோடு, அருகில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து புருஷோத்தமன் தலையில் தாக்கியுள்ளனர். இதில் புருஷோத்தமன் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பான போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமி பிரியா என்ற இளம்பெண்ணையும் அவரது நண்பரான விக்னேஷ் என்பவரையும் கைது செய்தனர். மேலும் 2பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

