• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி குளத்தூர் பகுதியில் ரூ.7,60,000/- மதிப்புள்ள 76 கிலோ கஞ்சா மற்றும் ஒரு கார் பறிமுதல்

policeseithitv by policeseithitv
July 30, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி குளத்தூர் பகுதியில் ரூ.7,60,000/- மதிப்புள்ள 76 கிலோ கஞ்சா  மற்றும் ஒரு கார் பறிமுதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூபாய் 7,60,000/- மதிப்புள்ள 76 கிலோ கஞ்சா  மற்றும் ஒரு கார் பறிமுதல் – பறிமுதல் செய்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.

குளத்தூர் பகுதியில் கஞ்சா கடத்துவதாக கடலோரபாதுகாப்பு குழும போலீசாருக்கும், மாவட்ட காவல்துறைக்கும் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களின் உத்தரவின்பேரில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில் குளத்தூர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) திரு. முருகன் தலைமையில் குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. செல்வன், முதல்நிலைக் காவலர் திரு. இராசையா, தனிப்பிரிவு காவலர் திரு. ராஜசேகரன் மற்றும் கடற்கரை காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ திரு. விஜயகுமார், திரு. பரமசிவன் ஆகியோர் 28.07.2021 குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழவைப்பாறு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த காரை சோதனை செய்ததில் அதில் 4 மூட்டைகளில் ரூபாய் 7,60,000/- மதிப்புள்ள 76 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்படி போலீசார் அந்த காரில் இருந்த ரூபாய் 7,60,000/- மதிப்புள்ள 76 கிலோ கஞ்சா மற்றும் அந்த காரையும் கைப்பற்றினர். இதுகுறித்து குளத்தூர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் திரு. முருகன் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான எதிரிகளை தேடி வருகின்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி 76 கிலோ கஞ்சாவையும், கடத்துவதற்கு பயன்டுபடுத்திய காரையும் கைப்பற்றிய குளத்தூர் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.

இந்த ஆண்டு இதுவரை கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் சம்மந்தப்பட்டதாக 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 227 பேர் கைது செய்யப்பட்டு 348 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா மற்றும் போதைப் பொருள் வழக்கில் சம்மந்தப்பட்ட 8 பேர் உட்பட 100 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போன்று தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 923 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 932 பேர் கைது செய்யப்பட்டு 75,000 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் எச்சரித்துள்ளார்.

Previous Post

குற்றங்களை தடுக்க டி.ஐ.ஜி தலைமையில் சிறப்‌‌‌பு ஆலோசனை கூட்டம்

Next Post

திருச்சி மாநகரில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளை விரைவாக விசாரணை செய்ய துணை கமிஷனர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

Next Post
திருச்சி மாநகரில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளை விரைவாக விசாரணை செய்ய துணை கமிஷனர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

திருச்சி மாநகரில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளை விரைவாக விசாரணை செய்ய துணை கமிஷனர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In