தூத்துக்குடியின் மையப்பகுதியில் பழைய பேருந்து நிலையம் அருகில் காய்கனி மார்கெட் பிரைவேட் லிமிடெட் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி அருகே உள்ள சிவஞானபுரம், குலையன்கரிசல், சிவத்தையாபுரம், சக்கம்மாள்புரம், ஏரல், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், அத்திமரப்பட்டி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் விவசாய பொருட்களை விற்பனை செய்யும் நோக்கில், பல்வேறு கிராமத்தை சேர்ந்த விவசாய பெருமக்கள் ஒன்றிணைந்து 1960ம் ஆண்டு துவக்கப்பட்டது தான் தூத்துக்குடி காய்கனி மார்க்கெட். விவசாயிகளின் பாரம்பரியமிக்கதாகவும் மற்றும் அவர்களது
வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தும் மார்க்கெட் ஆகவும் இந்த காய்கனி மார்க்கெட்; விளங்கி வருகிறது. தூத்துக்குடி சுற்றுவட்டார விவசாய பெருமக்கள் பெரிதும் நம்பி இருப்பது இந்த காமராஜ் காய்கனி மார்க்கெட்டை தான்.

விவசாயிகள் அதிகம் பயிரிடும் அனைத்து வகை காய்கனிகளை நேரடியாக இந்த மார்க்கெட்டிற்கு விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுவதால் இந்த காமராஜ் காய்கனி மார்க்கெட்டை பொறுத்தவரையில் விலை குறைவாகவும், தரமான காய்கனி கிடைப்பதாலும், தூத்துக்குடி மாநகர் மற்றும் புறநகர் பகுதி பொதுமக்கள் அதிகளவில் வாங்கி பயனடைந்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள திரேஸ்புரம், மாதாகோவில் தெரு, கடற்கரை பகுதி மக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதி மீளவிட்டான் அத்திமரப்பட்டி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் தூத்துக்குடி மையபகுதியில் உள்ள காய்கனி மார்க்கெட்டில் பொருட்களை வாங்கி வந்த நிலையில், சிறப்பாக செயல்பட்டு வரும் காமராஜர் காய்கனி மார்க்கெட்டின் தலைவராக சி.த.சுந்தரபாண்டியனும், செயலாளராக STS ஞானராஜும் இருந்து வருகிறார்கள். செயலாளர் STS ஞானராஜின் சித்தப்பா சி.த.செல்லப்பாண்டியன் ஆவார். இவர் தூத்துக்குடி முன்னாள் அமைச்சராகவும் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இவர் அங்கம் வகிக்கும் இயக்கத்தில் உட்கட்சி பூசல் காரணமாக எதிரும் புதிருமாக இருப்பவரும் தூத்துக்குடி திமுக முக்கிய புள்ளி ஒருவரும் இணைந்து சி.த.செல்லப்பாண்டியனுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமென்ற எண்ணத்தில் சி.த.சுந்தரபாண்டியன், STS ஞானராஜ் ஆகியோர்கள் அங்கம் வகிக்கும் காமராஜர் காய்கனி மார்க்கெட்டிற்கு பல்வேறு நெருக்கடி கொடுக்க துவங்கியதாக கூறப்படுகிறது.
இதனை அரசியல் காழ்புணர்ச்சியோடு மட்டுமல்லாமல் தங்களது சுயலாபத்திற்காக, பை-பாஸ் ரோடு பகுதியில் புதிய காய்கனி மார்க்கெட் அமைக்க அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்தது தற்போது அம்பலமாகி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திமுக முக்கிய புள்ளி ஒருவருக்கும், அதிமுக முக்கிய புள்ளிகள் மூன்று பேருக்கும் பை-பாஸ் சாலை பகுதியில் 4 ஏக்கர் இடம் உள்ளதாம், இதில் ஒரு ஏக்கர் புறம்போக்கு நிலம் என்றும் கூறப்படுகிறது. அந்த இடத்திற்கு புதிய காய்கனி மார்க்கெட்டை கொண்டு சென்றால், அந்த பகுதியில் உள்ள தங்களது நிலத்தின் மதிப்பு உயரும் என கருதி சுயநலத்துடன் காமராஜர் காய்கனி மார்க்கெட்டை முடக்க காய்களை நகர்த்தி வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பார்கள் அதுதான் இதுவோ?… அரசியல் எதிரியை வீழ்த்தியதோடு, தங்களது இடத்தில் காய்கனி மார்க்கெட்டை கொண்டு சென்று பயனடையலாம் என்ற சுயநலம் தான்.
சி.த.சுந்தரபாண்டியனுக்கு பெருகும் ஆதரவு
தூத்துக்குடி காமராஜர் காய்கனி மார்க்கெட்டிற்கு எதிராகவும், அதன் தலைவர் சி.த.சுந்தரபாண்டியன், செயலாளர் STS ஞானராஜ் ஆகியோருக்கு எதிராகவும் காழ்புணர்ச்சியோடு, சதிவலைகள் பின்னியது பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் தற்போது வெட்டவெளிச்சமாகி வருகிறது.
குறிப்பாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இழுத்து மூட வேண்டுமென மக்கள் போராட்டம் தொடர்ந்து நடத்தி வந்த நேரத்தில் வணிகர்கள் சங்கம் சார்பில் பொதுமக்களின் போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்த நேரத்தில் தூத்துக்குடி முழுவதும் கடை அடைப்புகள் நடைபெற்ற போது, முதன் முதலில் தூத்துக்குடி காமராஜர் காய்கனி மார்க்கெட் நிர்வாகத்தை சார்ந்தவர்கள் அனைவரும் கடைகளை மூடி தங்கள் ஆதரவை பொதுமக்களுக்கு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காய்கனி மார்க்கெட்டின் தலைவர் சி.த.சுந்தரபாண்டியன், மார்க்கெட்டின் செயலாளர் STS.ஞானராஜ் ஆகியோர் கிறிஸ்தவ ஆலயங்கள் கட்டுமான பணி, மற்றும் பல்வேறு அசன பண்டிகைகளுக்கு இவர்கள் பெருமளவு உதவி செய்து வருவதால், தூத்துக்குடியில் உள்ள கிறிஸ்தவர்கள் மத்தியில் நற்பெயர் உண்டு. அதுபோல் காய்கனி மார்க்கெட்டில் கடைகள் வைத்துள்ள நபர்கள் மற்றும் விவசாயிகளின் குடும்பத்தினர்களுக்கு பெருமளவு உதவி புரிந்துள்ளார். இதனால், இந்த நிர்வாகிகள் எடுக்கும் முடிவுக்கு அவர்கள் அரசியல் ரீதியாக யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களோ அவர்களுக்கு சுமார் 4000 குடும்பங்கள் சார்ந்த வியாபாரிகளும், விவசாயிகளும் ஆதரவு தெரிவிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இவர்களது செல்வாக்கை பொறுத்துக்கொள்ள முடியாததால், இவர்களுக்கு அரசியல் ரீதியாகவும், சுயலாபத்திற்காகவும் இந்த மார்க்கெட் நிர்வாகத்திற்கு நெருக்கடி கொடுக்க துவங்கினார்கள் சிலர்.
கொரானா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டி அரசு உத்தரவிட்டதால், சென்னை கோயம்பேடு காய்கனி மார்க்கெட் உட்பட பல மாவட்டங்களில் செயல்பட்டு வந்த காய்கனி மார்க்கெட் மூடப்பட்டது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கில் தற்காலிகமாக புதிய பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
இந்த சந்தப்பதை பயன்படுத்தி காய்கனி மார்க்கெட்டை இயங்க விடாமல் தடுக்கும் நோக்கில் அரசியல் உள்ளே நுழைந்துள்ளது. இது கொரானா பரபரப்பையும் மிஞ்சி காய்கனி மார்க்கெட் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த நேரத்தில் மார்கெட் நிர்வாகத்தினர் மீதும் அவரது உறவினர் சி. த. செல்லப் பாண்டியன் மீதும் பல்வேறு பொய் புகார்களை பரப்பி குறிப்பாக அதிக வாடகை வசூல் செய்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
அரசு அதிகாரிகளை மிரட்டும் வகையில் அதிகார துஸ்பிரயோகம் செய்துகொண்டு அவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து, வரி பாக்கி உள்ளதாக காரணம் காட்டி கொண்டு பாரம்பரியமிக்க காய்கனி மார்க்கெட்டையே இழுத்து மூட சதிதிட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி STS ஞானராஜ் தெரிவித்தாவது: மார்க்கெட் லாபத்தில் 5 சதவீதத்தை வரியாக கட்டினோம். மாநகராட்சியானதும் ஒரேயடியாக 25 சதவீதமாக உயர்த்தி விட்டனர். அதை குறைக்கும்படி கோரிக்கை வைத்துள்ளதால், வரி கட்ட முடியாத சூழல் ஏற்பட்டது. முதல் கட்டமாக மூன்று வருடத்திற்கான வரியை கட்டியிருக்கிறோம். படிப்படியாக மற்ற ஒருசில குறைகளையும் சரி செய்து விடுவோம். எங்கள் சித்தப்பா சி.த.செல்லப்பாண்டியன் முன்னாள் அமைச்சர் ஆவார். இவர் தற்போது அதிமுக மாநில நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். அரசியல் ரீதியாக அவருக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமென நினைப்பவர்கள் மார்க்கெட்டை எதிரியாக பார்ப்பது அதனால் அவர்கள் நெருக்கடி கொடுப்பது வேதனையளிக்கிறது என்று தெரிவித்தார்.
இதுகுறித்து சி.த.செல்லப்பாண்டியன் தெரிவித்ததாவது: காய்கனி மார்க்கெட்டில் இயக்குநராகவே இல்லாத என்னை இந்த மார்க்கெட்டில் 6 இயக்குநர்களில் ஒருவராக சித்தரித்து பொய் தகவல்களை பரப்பி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஒருசிலர் செயல்பட்டு வருகின்றனர். எங்களது இயக்கத்தில் உள்ள ஒரு துரோகியும், திமுக சட்டமன்ற உறுப்பினரும், கட்சி கட்டுப்பாட்டை மீறி அவர்கள் இணைந்து கொண்டு எனக்கும் என் குடும்பத்தாருக்கும் களங்கம் ஏற்படுத்தி வருகிறார்கள். அரசியல் ரீதியாக எங்களை எதிர்கொள்ள முடியாமல் நான் மார்க்கெட் இயக்குநர் என பொய் தகவல்களை பரப்பியும் வருகிறார்கள். இதை அவர்களால் நிருபிக்க முடியுமா? என்று சவால் விட்டார். பொய் தகவல்களை பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வேன் என தெரிவித்தார். கொரானா தொற்று காரணமாக, ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆணைக்கிணங்க, தூத்துக்குடியில் 50 நாட்களாக எனது சொந்த செலவில் 1.50 கோடி மதிப்பில் நிவாரண பொருட்கள் வழங்கி வரும் நிலையில் அரசியல் ரீதியாக பொறுத்துக்கொள்ள முடியாத நபர்கள் எனக்கு நெருக்கடி கொடுப்பதாக நினைத்து எனது உறவினர்கள் அங்கம் வகிக்கும் பாரம்பரியமிக்க மார்க்கெட்டிற்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள் என்பது வேதனையளிக்கிறது என்று தெரிவித்தார்.
இந்த மார்;க்கெட் விவகாரத்தில் சி.த.செல்லப்பாண்டியனுக்கு எதிராக செயல்படுவதாக நினைத்து அவரது சகோதரர் சி.த.சுந்தரபாண்டியனுக்கு நெருக்கடி கொடுப்பதும், மார்க்கெட்டை நம்பி வாழ்ந்த 4000 குடும்பங்கள் மற்றும் வியாபாரிகளின் தொழிலை நசுக்குவதும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையிலும், பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறார்கள் மார்க்கெட்டுக்கு எதிராக களமிறங்கியுள்ள ஒருசிலர். தற்போது இந்த விசயம் பொதுமக்களுக்கும் வியாபாரிகள் உட்பட அணைத்து தரப்பினருக்கும் தெரியவந்துள்ளது.
மாநகராட்சி வட்டாரத்தில் பெயர் சொல்ல விரும்பாத சிலரிடம் விசாரித்தபோது: மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மார்க்கெட் வளாகத்திற்குள் செய்து கொடுக்க வேண்டும் என்றும், லைசென்ஸ் புதுப்பிக்க வேண்டும். வரியை பாக்கி இல்லாமல் செலுத்த வேண்டும் என்பது மட்டுமே மாநகராட்சியின் நோக்கம். தற்போது வரியை மார்க்கெட் நிர்வாகம் செலுத்தி விட்டார்கள். மேலும் மாநகராட்சி விதிமுறைகளை பின்பற்றிவிடுவதாகவும் தெரிவித்துவிட்டார்கள். அப்படியிருக்கும் போது காமராஜர் காய்கனி மார்க்கெட்டில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு அரசியல் ரீதியான காழ்புணர்ச்சி நெருக்கடியே காரணம் என மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
60 ஆண்டுகளாக தூத்துக்குடிக்கு அடையாளமாக விளங்கி வரும் காய்கனி மார்க்கெட் பொதுமக்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. இந்த பாரம்பரியமிக்க மார்க்கெட் காப்பற்றப்படவேண்டும் என்பதே தூத்துக்குடி பொதுமக்களின் விருப்பமாக உள்ளது. காய்கனி மார்க்கெட்டில் அரசியல் எதிரிகளால் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளால் பாதிக்கப்படுவது விவசாய மக்களே அதிகம். இதனால் தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் கோரிக்கை மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு நடுநிலையோடு நல்ல முடிவு எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி தொகுப்பு:
போலீஸ் செய்தி டிவிக்காக
சிறப்பு செய்தியாளர் அருண்
