திருவாரூர் தாலுகா காவல் சரகம் கூடூர் பகுதியில் கடந்த 19.06.21 அன்று SBI-ATM ல் நடைபெற்ற கொள்ளையை தடுக்கச்சென்ற தமிழரசன் என்பவரை கொள்ளையர்கள் கொலை செய்தநிலையில் கொலையாளிகள் 04-பேரையும் பிடித்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்படி பகுதியின் பாதுகாப்பு கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் தீவிர முயற்சி மற்றும் ஏற்பாட்டின்பேரில் இன்று காலை 06 CCTV காமிராக்கள் கண்காணிப்பு பயன்பாட்டிற்கு வந்தது.
மேற்படி 06-CCTV காமிராக்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இன்று காலை துவங்கி வைத்து CCTV காமிரா அமைக்க காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்த அப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் குற்றத்தடுப்பு, குற்ற விழிப்புணர்வு, குறித்தும், CCTV காமிரா & அலாரம் ஆகியவற்றை வீட்டில் அமைப்பது குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் அறிவுரை வழங்கினார்கள்.
மேலும் பொதுமக்கள் வீடுகளை பூட்டி வெளியூர்களுக்கு செல்லும்போது தவறாமல் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து செல்ல அறிவுறுத்தினார்
மேலும் நடப்பு ஆண்டில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக 1000 CCTV காமிராக்கள் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்

