சாத்தான்குளம் அரசு போக்குவரத்து கழக பனிமனை யில் இருந்து கூடுதல் பேருந்துகளை இயக்கும் வகையில் பனிமனையை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஆய்வுப் பணி யில் அமைச்சர் அனிதா ஆர். இராதாகி ருஷ்ணன் மற்றும் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ ஆகியோர் ஈடுபட்டனர்.
சாத்தான்குளத்தில் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைக்க உத்தரவிட்டார். இதன்படி, சாத்தான்குளத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைப்பதற்காக சாத்தான்குளம் – நாசரேத் செல்லும் சாலையில் உள்ள நிலத்தை அப்பகுதி விவசாயிகளும் பொது மக்களும் தானமாக வழங்கினர். இதையடுத்து, ரூ1.10 கோடி மதிப்பில் பணிமனை அமைக்கப்பட்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி வைத்தார். அப்போது திசையன்விளை, நெல்லை போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து 3 பேருந்துகள் இப்பணிமனைக்கு மாற்றப்பட்டு இயக்கப்பட்டது. அதன்பின் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் பணிமனையில் உள்ள டவுன் பேருந்துகள் இப்பணிமனைக்கு மாற்றப்பட்டது. அதன்படி இதுவரை 7 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
பணிமனை தொடங்கப்பட்டதும் தூத்துக்குடி, மதுரை, கோவை, திருச்சி, தஞ்சாவூர் பகுதிக்கு பேருந்துகள் இயக்கப்படும் எனவும், குக்கிராமங்களுக்கும் பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது.ஆனால், அரசு போக்குவரத்து கழக பணிமனை தொடங்கி 5 ஆண்டுகளாகியும் இதுவரை 7 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக நிர்ணயிக்கப்பட்ட அரசு பஸ்களை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இப்பணிமனையில் இருந்து தொலை தூர பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்ற அறிவிப்பும் வெறும் கானல் நீராகவே உள்ளது. மேலும், சாத்தான்குளம் – நாசரேத் செல்லும் சாலையில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் பணிமனை அமைக்கப்பட்டு சாலை வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் பணிமனையில் இருந்து மெயின் சாலை வரை விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் பணிமனை பணியாளர்கள் அச்சமடையும் நிலை உள்ளது. பணிமனையில் பணியாளர்களுக்கு தேவையான குடிநீர் வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. எனவே பணிமனையில் இருந்து பிரதான சாலை வரை தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். குடிநீர் வசதியும் செய்து கொடுக்க வேண்டும் என்பதும்சாத்தான்குளத்தில் இருந்து அனைத்து பகுதிக்கும் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சாத்தான்குளம் அரசு போக்குவரத்து கழகத்தின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். இதன்படி, ஜூலை 2ம் தேதி போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்தித்த ஶ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், சாத்தான்குளத்தில் இருந்து கூடுதல் பேருந்துக்களை இயக்குவதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், சாத்தான்குளம் அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து கூடுதல் பேருந்துகளை இயக்கும் வகையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஆய்வுப் பணியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ ஆகியோர் சனிக்கிழமை ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் தொலைபேசி யில் பேசிய மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ ஆகியோர் சாத்தான்குளம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். முன்னதாக அமைச்சர், போக்குவரத்து தொழிலாளர் முன்னே ற்ற சங்க கொடியேற்றி பெயர் பலகை யை திறந்து வைத்தார்.
பின்னர் பணிமனையில் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ தலைமையில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடந்தது. இதில் போக்குவரத்து கழக நெல்லை மண்டல மேலாண்மை இயக்குநர் ராஜேஸ்வரன், பொது மேலாளர் சரவணன், பணிமனை மேலாளர் கணேசன், சாத்தான்குளம் தாசில்தார் விமலா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது எம்எல்ஏ, பணிமனையில் இருந்து முனைஞ்சிப்பட்டி, ஸ்ரீவைகுண் டம், பெரியதாழை உள்ளிட்ட முக்கிய கிராமங்களுக்கு 20 டவுன் பஸ்கள் இயக்கிட வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாநில செயற்குழு உறுப்பினர் பில்லாஜெகன், மாவட்ட திமுக அவைத் தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோசப், தெற்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பசுபதி, இந்திரகாசி, ஒன்றிய பொருளாளர் வேல்துரை, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் லூர்துமணி, பார்த்தசாரதி, சக்திவேல்முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் குருசாமி, பிச்சிவிளை சுதாகர், நகர காங்கிரஸ் தலைவர் வேணுகோபால், துணைத் தலைவர் கதிர்வேல், கூட்டுறவு கடன் சங்க துணைத் தலைவர் ஜோசப் அலெக்ஸ், நகர தொண்டரணி அமைப்பாளர் பாஸ்கர், மாவட்ட பொருளாளர் எடிசன், முதலூர் ஊராட்சித் தலைவர் பொன்முருகேசன், நடுவக்குறிச்சி முன்னாள் ஊராட்சித் தலைவர் ஆனந்தகுமார், போனிபாஸ் கொம்மடிக்கோட்டை காசியானந்தம், மாவட்ட மீனவரணி காங்கிரஸ் தலைவர் அந்தோணிசுரேஷ், துணை அமைப்பாளர் ரமேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

