தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முன்கள பணியாளர்களுக்கு உதவியாக சேவையாற்றி வரும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டு பகுதியில் மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு உதவியாக சிறப்பாக பணியாற்றி வரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக மாணவர் ஜாய்சன், பிஷப் கால்டுவெல் கல்லூரி மாணவர்கள் மாரிச்சசெல்வம், சதீஷ், வ.உ.சி கல்லூரி மாணவர்கள் கார்த்திக், அகிலேஷ், சுதீஸ் பெருமாள், மாணவி லெட்சுமி பிரியா, ஸ்நேகா, டான்போஸ்கோ கல்லூரி மாணவர்கள் ஜோசப் சேவியர் அலேக்ஸ், மூக்கையாராஜ், சேவியர் பள்ளி மாணவர்கள் விக்னேஷ், விஷ்வா, கருணாகரன், ஹரிஹர கோபால், ராஜா,
அசோக்குமார், ராமகிருஷ்ணன், மணிகண்டன், ஜோசப் தாமஸ் இன்பெண்ட், போப்ஸ் கல்லூரி மாணவர்கள் ஜெரால்ட் ஜெபதுரை, ரோஷன் ஜெயராஜ், பொன்மாரிச் செல்வம், காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைபள்ளி மாணவர் ஸ்டூவர்ட் டேவிட்சன், ராஜலட்சுமி கல்லூரி மாணவர் கிஷோர்குமார், அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் நாகேந்திரன், கேட்டரிங் கல்லூரி மாணவர் சுயம்புலிங்கம், செவிலியர் கல்லூரி மாணவர் அழகுமுரளி, இன்பென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி மாணவர் மாரிச்செல்வம், காமராஜ் கல்லூரி மாணவர்கள் தரணியன், சதீஷ்குமார், சேவியர் கல்லூரி மாணவர் தினேஷ்வரன், ஏபிசி கல்லூரி மாணவி முத்துகல்யாணி ஆகிய 33 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
அப்போது எஸ்பி பேசுகையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் மாணவர்களாகிய நீங்கள் தான் நாட்டின் வருங்கால தூண்கள், கல்லூரி பருவம் மிக முக்கிய பருவம், இப்பருவத்தில் கல்வி கற்றுக்கொள்வது ஒன்று மட்டுமே உங்களின் குறிக்கோளாக இருக்கவேண்டும். நீங்கள் பெறக்கூடிய பட்டங்கள் தான் உங்களை மிக சிறந்தவர்களாக்கும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் சாயர்புரம் போப்ஸ் கல்லூரி முதல்வர் இம்மானுவேல், நாட்டு நலப்பணிதிட்ட ஒருங்கிணைப்பாளர் தினகரன், ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா, சாயர்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், சாயர்புரம் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் மைக்கேல் ராஜ பிரதீஸ் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

