குடவாசல் காவல் சரகத்தில் நேற்று காலை நிகழ்ந்த சாலைவிபத்தில் இருசக்கர வாகனத்தில்
சென்ற இரண்டுபேர் லாரி மோதி சம்பவ இடத்தில் உயிழந்தனர்.
இறந்த இருவரும் தலைக்கவசம் அணியாமல் சென்றுள்ளனர் என விசாரணையில் தெரியவந்தது.
அப்பகுதில் நிகழ்ந்த இரட்டை உயிரிழப்பு விபத்து குறித்து விசாரணை செய்ய
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் அவர்கள் உடன் சம்பவ இடம் சென்று
சம்பவ இடத்தை ஆய்வு செய்தார்
பின்னர் அப்பகுதியில் விபத்தினை தடுக்கவும், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், எச்சரிக்கை பதாகைகள், எதிரொளிப்பான்கள், வேகத்தடைகள் ஆகியவை அமைக்கவும் காவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்

