தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் புளியங்குடி பகுதியில் சாலையில் நடந்து சென்ற நபரை அதே பகுதியில் உள்ள வேறு சமுதாயத்தை சேர்ந்த 03 நபர்கள் வழிமறித்து அவதூறாக பேசி அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டதை அடுத்து உடனடியாக குற்றவாளிகளை பிடித்து கைது செய்து இரு வேறு தரப்பு சமுதாயத்திற்கும் இடையே பிரச்சனை வராமல் பார்த்துக்கொண்ட புளியங்குடி தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர்வேல்முருகன் அவர்கள் தலைமை காவலர் ஜெயராஜ் மற்றும் முதல்நிலை காவலர் மாரிச்சாமி ஆகியோருக்கும்.
கொரோனாவால் தென்காசி மங்கம்மாள் சாலையில் உள்ள ரயில்வே நிலையத்தில் உணவின்றி தவித்த 150 நபர்களுக்கு உணவு வழங்கிய தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் தர்மலட்சுமி அவர்களுக்கும்.
ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 40 லிட்டர் கள்ளச்சாராயம் ஊறல் வைத்திருந்த நபரை துரிதமாக கண்டறிந்த ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய தனிப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகன் ஆலங்குளம் Communal தனிப்பிரிவு தலைமை காவலர் ரவி மற்றும் கடையம் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் ஆனந்தராஜ் ஆகிய 08 காவல் ஆளிநர்களின் மனிதாபிமான மற்றும் அதிரடியான நடவடிக்கைகளை பாராட்டி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்னராஜ் IPS நற்ச்சன்றுகள் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.

