கோவில்பட்டியில் 125க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு, விதவைகள், ஏழை மக்களுக்கு,பத்திரிகையாளர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள், மசாலா சாமான்கள், அடங்கிய தொகுப்பு பை வழங்கப்பட்டது. கோவில்பட்டியில் 125க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு, விதவைகள், ஏழை மக்களுக்கு,பத்திரிகையாளர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள், மசாலா சாமான்கள், அடங்கிய தொகுப்பு பை கோவில்பட்டியில் இன்று வழங்கப்பட்டது கோவில்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் வைத்து வாழ்வாதாரத்தை இழந்த 125க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு, விதவைகள், ஏழை மக்களுக்கு,பத்திரிகையாளர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள், மசாலா சாமான்கள், அடங்கிய தொகுப்பு பை இன்று காலை 10 மணிக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பங்கேற்று நிவாரண பொருட்களை வழங்கினார். கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் கலை கதிரவன் முன்னிலை வகித்தார் இந்த நிகழ்வில் தமிழன்டா இயக்கம்,கலைக்கூடம் தலைவர் செ.ஜெகஜீவன், தமிழன்டா இயக்க மாநில செயலாளர் கதிர்வேல், மாநில பொருளாளர் பிரம்ம ராஜ், மகளிர் அணி மாரியம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.

