விளாத்திகுளம் உட்கோட்டம் தருவைகுளம் காவல்நிலைய எல்லை பகுதியில் பெண் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த எதிரி கைது.*
தருவைகுளம் காவல்நிலைய எல்லை பகுதியில் பெண் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 5 எதிரிகள் கைது செய்யப்பட்டு 4 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக இருந்த எதிரி (A5) சுப்பிரமணியன் என்பவனை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுபடி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தநிலையில் இன்று எதிரி சுப்பிரமணியன் வயது31 என்பவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.*
சிறப்பாக செயல்பட்டு கொலை வழக்கு எதிரியை கைது செய்த தனிப்படையினரை விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.*

