தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 23.12 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : உச்சநீதி மன்ற உத்தரவின்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலுள்ள ஆக்ஸிஜன் அலகு திறக்கப்பட்டு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பணிதுவங்கியது. மாவட்டஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 23.12 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டு, 5.70 மெட்ரிக் டன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக்கும், 5.76 மெட்ரிக் டன் நாமக்கல் ஸ்ரீலெட்சுமி ஆக்ஸிஜன் நிறுவனத்திற்கும், 0.58 மெட்ரிக் டன் தூத்துக்குடி அரசன் கேஸ் ஏஜென்சீஸ் நிறுவனத்திற்கும், 11.08 மெட்ரிக் டன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

