தென்காசி வடக்கு மாவட்டதிமுக சார்பில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதத்தில் இலவச உணவு தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லத்துரை தொடங்கி வைத்தார்.
தென்காசிமே 26 தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கடையநல்லூர் மற்றும் வாசுதேவநல்லூர் சட்டமன்றத்திற்குட்பட்ட பகுதிகளில் தமிழக முதல்வரும் திமுக தலைவரும் தளபதி ஸ்டாலின் ஆணைக்கிணங்க
கொரானா கால எந்தவொடு தனி மனிதனும் ஊரடங்கின் போது மக்களின் பசியை போக்கிட திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு. க .ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்க அறிவுரை வழங்கினார் அதன்படி கடையநல்லூர் தொகுதியில் கிருஷ்ணாபுரம் கடையநல்லூர் மேலக்கடையநல்லூர் ஆகிய பகுதிகளிலும் வாசுதேவநல்லூர் தொகுதியிலும்ல் தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லத்துரை தலைமையில் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மாவடிக்கால் சுந்தர மகாலிங்கம், நகரச் செயலாளர் சேகனா, மாவட்ட வழக்கறிஞர் அணிவக்கீல் செந்தூர்பாண்டியன், 21 துவார்டு செயலர் ராமச்சந்திரன் 5வது வார்டு செயலர் முருகையா காசி பெருமாள் துரை, மத்திய தொமுச துணைச் செயலாளர் டிரைவர் கணேசன் 3 வது வார்டு செயலாளர்,பூ கனேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான ஏழை எளிய மக்கள் உணவு பொட்டலங்களை வாங்கி சென்றனர். ஊரடங்கு காலம் முடியும் வரை தொடர்ந்து வடக்கு மாவட்டம் முழுவதிலும் ஏராளமான இடங்களில் இது போன்ற உணவுப் பொட்டலங்கள் தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் என மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லத்துரை தெரிவித்தார்.

