தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி IPS.அவரின் ஆணைக்கினங்க தென்கரை காவல் ஆய்வாளர் சுகுமார்,பெரியகுளம் நகர காவல் ஆய்வாளர் மற்றும் தேவதானப்பட்டி ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர், தமிழக அரசின் 144 தடை
உத்தரவை மீறி மதியம் 2 மணிக்கு மேல் மருத்துவ பணிகள்,மற்றும் உணவு பொருட்கள் வாங்க செல்பவர்களை தவிர மற்ற அத்தியாவசியமான செயல்களுக்கப்பால் சுற்றித்திரிந்த 40க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டு உள்ளது.
தமிழக அரசின் ஆணைக்கிணங்ககொரோனா மாபெரும் தொற்று நோயில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற தமிழக அரசின் உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேட்கொள்ளப்பட்டு வருவதாக பெரியகுளம் தென்கரை காவல் ஆய்வாளர் சுகுமார் கூறியுள்ளார்.
வீட்டை விட்டு இரு சக்கர வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றி திரிபவர்கள் மீது காவல்துறை, வாகனங்களை பறிமுதல் செய்து. ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்ற எச்சரிக்கையை இதன் வாயிலாக தெரிவித்துக்
கொள்வதாக காவல் ஆய்வாளர் கூறியுள்ளார்.

