• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 7 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, எஸ்பி எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ்

policeseithitv by policeseithitv
May 17, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 7 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, எஸ்பி எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 7 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.*

 

*கடந்த 13.05.2021 அன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 20 அட்டை பெட்டிகளில் 960 மதுபாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த எதிரிகளை கைது செய்து அவர்களிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தும், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட அண்ணாநகர் முருகன் கோவில் பகுதியில் 07.05.2021 அன்று அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா சுமார் 4 கிலோ 50 கிராம் வைத்திருந்த எதிரியை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை கைபற்றியும், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (எ) கண்ணன் என்பவர் சட்டவிரோதமான விற்பனைக்காக தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1872 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தும், எதிரியை கைது செய்த தூத்துக்குடி வடபாகம் குற்ற பிரிவு ஆய்வாளர் திரு. ராமகிருஷ்ணன், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆனந்தராஜன், வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல்ராஜ், தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு. வேல்ராஜ், திரு. சிவக்குமார், தலைமை காவலர் திரு. பென்சிங், முதல் நிலை காவலர்கள் திரு. சாமுவேல், திரு. மாணிக்கராஜ், திரு. மகாலிங்கம், காவலர்கள் திரு. செந்தில், திரு. திருமணி, திரு. முத்துபாண்டி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,*

 

*கடந்த 06.05.2021 தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தருவைக்குளம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு அருகே ரோந்து பணியின்போது எதிரி அமலன் பச்சேக் என்பவரை சோதனை செய்ததில் அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை கைப்பற்றியும், அவரை கைது செய்த தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. மகாராஜா, தலைமை காவலர் திரு. மோகன்ஜோதி, முதல் நிலை காவலர்கள் திரு. சொர்ணபாலன் மற்றும் திரு. பன்னீர்செல்வம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,*

 

*கடந்த 09.05.2021 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கின் எதிரிகளை விரைந்து கைது செய்து சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. வேல்முருகன் உதவி ஆய்வாளர் திரு. சங்கர், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. நம்பிராஜன், தனிப்பிரிவு முதல் நிலை காவலர் திரு. கலைவாணர், முதல் நிலை காவலர்கள் திரு. செல்வின்ராஜா, திரு. சிவநேசமாணிக்கம், காவலர் திரு. சுஜேந்திரன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,*

 

*கடந்த 13.05.2021 அன்று திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் தினசரி சந்தை பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 419 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து, எதிரிகளை கைது செய்த திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஞானசேகரன், உதவி ஆய்வாளர் திரு. சுந்தரம், திருச்செந்தூர் போக்குவரத்து பிரிவு தலைமைகாவலர் திரு. ராஜ்குமார், ஆத்தூர் காவல் நிலைய தலைமை காவலர் திரு. இசக்கியப்பன், திருச்செந்தூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. சொர்ணராஜ் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,*

 

*கடந்த 09.05.2021 அன்று குலசை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்றவர்கள் மீது 18 வழக்குகள் பதிவு செய்து சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்து 319 மதுபாட்டில்களை கைப்பற்றிய குலசை காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மங்கையர்கரசி அவர்களின் மெச்சதகுந்த பணிக்காகவும்,*

 

*கடந்த 13.05.2021 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரெம்டெசிவர் மருந்தை கள்ள சந்தையில் விற்பனை செய்ய வைத்திருந்த 2 எதிரிகளை கையும் களவுமாக பிடித்து ரூபாய் 2,20,000/- மதிப்பிலான் 46 ரெம்டெசிவர் மருந்துகளை பறிமுதல் செய்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. தங்கராஜ், உதவி ஆய்வாளர் திரு. மாதவராஜா, தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. ஸ்டீபன், கோவில்பட்டி கிழக்கு குற்ற பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. நாராயணசாமி, கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் திரு. முருகன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய தலைமை காவலர் திரு. உலகநாதன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. ஸ்ரீராம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவலர் திரு. அருண் விக்னேஷ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,*

 

*கடந்த 09.05.2021 அன்று கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியில் நடைபெற்ற வழிப்பறி வழக்கில் சம்மந்தப்பட் எதிரியை கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 1,50,000/- மதிப்புள்ள தங்க நகைகளை கைப்பற்றிய கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சோபா ஜென்சி, உதவி ஆய்வாளர் திருமதி. காந்திமதி, தலைமை காவலர் திரு. சுப்புராஜ் முதல் நிலை காவலர் திரு. சுரேஷ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,*

 

*7 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.*

Previous Post

மனகுமுறலில் தமிழக காவல்துறையினர்

Next Post

ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி

Next Post
ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி

ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In