சென்னை மெரீனா காந்தி சிலை அருகில் கிழக்கு போக்குவரத்து காவல்துறை சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் இருசக்கர வாகன பேரணி நிகழ்ச்சி. போக்குவரத்து தெற்கு இணை கமிஷ்னர் செந்தில் குமாரி தலைமையில் இன்று காலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் கொரோனா விழிப்புணர்வு உரையாற்றி பேரணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் கமிஷ்னர் பவானீஸ்வரி , கிழக்கு மாவட்ட போக்குவரத்து துணை கமிஷ்னர் பாலகிருஷ்ணன், தெற்கு மாவட்ட போக்குவரத்து துணை கமிஷ்னர் தீபா சத்யன் உள்பட அனைத்து உயர்அதிகாரிகளும்,காவலர்களும் கலந்து கொண்டனர்.


