தூத்துக்குடியில மளிகை கடையில் ரூ.1.10லட்சம் பணம், மற்றும் ரூ.40ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிய 3பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி போல்பேட்டையைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் மகன் ஆனந்தராஜ் (44), அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்னர் கடையை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். நேற்று காலை கடையை திறக்கவந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், கல்லாவில் வைத்திருந்த ரூ.1லட்சத்து 10ஆயிரம் பணம், மற்றும் கடையில் இருந்த 40ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பண்டல்கள் திருடுபோயிருந்தது.
இதுகுறித்து அவர் வடபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். கடையின் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தி, தூத்துக்குடி ரஹமத்துல்லா புரத்தைச் சேர்ந்த ராமநாதன் மகன் கோவிந்தராஜன் (19), முத்துக்குமார் மகன் கந்தசிவா (18), அவரது நண்பர் கன்னியாகுமரி மாவட்டம் மேட்டு குடியிருப்பைச் சேர்ந்த குமார் மகன் மாரியப்பன் (19) ஆகிய 3பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பணம், மற்றும் சிகரெட் பண்டல்களை பறிமுதல் செய்யப்பட்டது.

