தென்காசி மாவட்டம், புளியரை காவல் நிலையத்தில் பணியின் போது உயிரிழந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் வேலையா, சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் கண்ணன், ஆலங்குளம் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணிபுரிந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் மாரியப்பன் ஆகியோர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியாக தலா 3 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுண சிங் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வழங்கினார்.


