• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சரத்குமார், ராதிகா ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை – சென்னை சிறப்பு நீதிமன்றம்.

policeseithitv by policeseithitv
April 7, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர மக்கள் நீதி மய்யம் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் – சரத்குமாா்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
காசோலை மோசடி வழக்கில் சரத்குமார் மற்றும் அவர் மனைவி ராதிகா ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது சென்னை சிறப்பு நீதிமன்றம்.
நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் சரத்குமார் பங்குதாரராக இருக்கும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் 2014-ஆம் ஆண்டு விக்ரம் பிரபு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டு இருந்தது. ஒன்றரை கோடி ரூபாயை ரேடியன்ஸ் நிறுவனத்திடம் கடனாக வாங்கி இருந்தனர். 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணத்தை திருப்பி தந்து விடுவதாக கூறினர். திருப்பி தந்துவிட்டு படத்தை வெளியிடுவோம் என்றும் தெரிவித்தனர். ஆனால் பணத்தை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் திருப்பித் தரவில்லை.
பாம்பு சட்டை என்ற பெயரில் வேறு ஒரு படம் தயாரித்தது. ரேடியன்ஸ் நிறுவனத்திற்கு மேஜிக் பிரேம்ஸ் வழங்கிய செக் பவுன்ஸ் ஆகியது. இதையடுத்து நீதிமன்றத்தில் ரேடியன்ஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று கூட உத்தரவு வழங்கியது நீதிமன்றம்.
மொத்தம் 7 வழக்குகளில் சரத்குமார் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டார். 2 வழக்குகளில் ராதிகா மற்றும் ஸ்டீபன் ஆகியோரும் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டனர். இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. மூன்று பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது நீதிமன்றம். 7 வழக்குகளில் எதிர் மனுதாரராக இருக்கும் சரத்குமாருக்கு தலா ஒரு வருடம், ராதிகாவுக்கும், ஸ்டீபனுக்கும் 2 வழக்குகளில் தலா ஒரு வருடம் சிறை என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மூன்று பேர் தரப்பிலும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது இன்று மாலைக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. ஒருவேளை தண்டனை நிறுத்தப்பட்டால், இவர்கள் சிறைக்கு செல்வது தடுக்கப்படும்.
Previous Post

வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கை நடத்தக் கூடாது – டாக்டர் கிருஷ்ணசாமி

Next Post

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படுவதை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான செந்தில் ராஜ் பார்வையிட்டு ஆய்வு

Next Post
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படுவதை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான செந்தில் ராஜ் பார்வையிட்டு ஆய்வு

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படுவதை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான செந்தில் ராஜ் பார்வையிட்டு ஆய்வு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In