கொரோனாவைக் கட்டுப்படுத்த மக்கள் சேவையில் ஈடுபடும் காவல்துறையினருக்கு”
போலீஸ் செய்தி TV
சார்பில் 2 வது நாளாக துணை ஆசிரியர் கேசவன் முகக்கவசம் , சானிடைசர் ஆகிய பாதுகாப்பு பொருள்கள் வழங்கினார்.

கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்று அரசு கூறி வரும் நிலையில் ஆபத்து உணராமல் பொதுமக்கள் சிலர் இரு சக்கர வாகனங்களில் வெளியே வருகின்றனர் அப்படி வெளியே வருபவர்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு இல்லாமல் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டுவதன் அவசியம் ஆகியவற்றை தமிழகம் முழுவதும் காவல் துறையினர் துரிதமாக மக்கள் நலனுக்காக செய்து வருகின்றனர் அதுபோல்
கொரோனா பரவலைத் தடுக்கும் பணியில் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர் உள்ளிட்டோர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் நலனுக்காக பணியாற்றும் போலீசாருக்கு
“போலீஸ் செய்தி TV
நிர்வாக ஆசிர்யர் C.P.கிருஷ்ணன் அவர்கள் ஆலோசனை பெயரில் போலீஸ் துணை ஆசிரியர் கேசவன் அவர்கள்
சென்னை மாநகர் பகுதியில்
இரவு பகல் என்று பாராமல் தன் குடும்பத்தினரை கூட பார்க்க செல்லமுடியாமல் இந்த கடும் வெயிலில் மக்கள் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றிவரும் சுமார் 300 காவலர்களுக்கு மேல் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள், குளிர் பாணம் , பிஸ்கட் பாக்கெட் ஆகியவற்றை நேற்று நேரில் சென்று போலீஸ்சார்களுக்கு வழங்கி அவர்களின் பணிகளை பாராட்டி போலீஸ் செய்தி TV
சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.
ஊரடங்கு உத்தரவு நேரத்தில் தியாக உணர்வோடு மக்களுக்காக சேவை செய்யும் போக்குவரத்து காவல்துறை மற்றும் காவலர்களுக்கு சென்னையில் பத்திரிகையாளர்கள் தங்களது சகோதரர்களாக கருதி செய்து வரும் இந்த பணிகள் பொதுமக்கள்
மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது சமூக தொண்டு அமைப்புகள் மற்றும் மனித நேய பண்பாளர்கள் இது போன்று தமிழகம் முழுவதும் மனித நேயத்தோடு செயல் பட முடிவு செய்து பணியாற்றி வருகிறார்கள்
சென்னையை போன்று தமிழகம் முழுவதும் போலீஸ் செய்தி TV குழுமத்தில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் மனித நேய பணிகளை செய்ய உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது இன்று சென்னை மடிப்பாக்கம் உதவி ஆணையர், மற்றும் ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி. சந்திரஹாசன் ஆகியோரை நேரில் சந்தித்து காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணமாக விளங்கும் சானிடைசர், முக கவசம் ஆகியவை வழங்கினர். தனது குடும்பத்தை கூட பொறுப்படுத்தாமல் பொது மக்களுக்கா க இரவு பகல் என்று பாராமல் பணியாற்றும் காவலர்கள் நமக்கு தற்போது காவல் தெய்வம் ஆக விளங்குகிறார்கள்.அவர்கள் நலனில் அக்கறையோடு தற்போது போலீஸ் செய்தி டிவி சார்பில் 2 வது நாளாக முக கவசம் போன்ற பொருள்களை வழங்குகிறோம். என்று போலீஸ் செய்தி டிவி துணை ஆசிரியர் கேசவன் தெரிவித்தார். இந்த பணிகள் தமிழகம் தொடரும் என போலீஸ் செய்தி டிவி குழுமம் சார்பில் தெரிவிக்கபட்டது.
செய்தி தொகுப்பு
C. P. கிருஷ்ணன்
நிர்வாக ஆசிரியர்

